ஹோம் /Local News /

சுருளி அருவி செல்ல இது தான் சரியான நேரம்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்...

சுருளி அருவி செல்ல இது தான் சரியான நேரம்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்...

X
Suruli

Suruli falls

Theni District | தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வார இறுதி நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வார இறுதி நாட்கள் என்பதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

சுருளி அருவி :-

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனா தொற்று பரவத் தொடங்கியதன் காரணமாக மூடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கிய காலத்திலும் சுருளி அருவியானது, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், சுருளி அருவி கடந்த சில மாதத்திற்கு முன்னதாக திறக்கப்பட்ட நிலையில், சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது

மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, மழை நேரத்தில் பொழுது மட்டுமே சுருளி அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. தற்போது மழை பொழிவு இல்லாத காரணத்தினால் அருவியில் குறைந்த அளவிலான

நீர் வரத்தே உள்ளது.

சுருளி அருவியில் நீர்வரத்து குறைவாக இருந்தாலும் கோடைகாலம் என்பதால் நாளுக்கு நாள் பொதுமக்களின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக கோடைகாலத்தை சமாளிக்க வார இறுதி நாட்களில் அதிக அளவிலான பெண்கள், குழந்தைகள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் அருவி பகுதிக்கு வர தொடங்கி உள்ளனர்.

அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக் கவசம் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருத்தல் கட்டாயம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்

செய்தியாளர்: சுதர்ஸன்

First published:

Tags: Cumbum, Theni