ஹோம் /Local News /

சின்னமனூர் சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரருக்கு திருக்கல்யாணம்!!

சின்னமனூர் சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரருக்கு திருக்கல்யாணம்!!

X
Shivagamiyamman

Shivagamiyamman

Theni Chinnamanur | தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் நடந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் நடந்தது.

திருக்கல்யாண நிகழ்வு :-

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது இக்கோவிலின் முக்கிய சிறப்பம்சமாகும் .

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவகாமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் , இந்த ஆண்டு பிரம்மாண்டமாக சித்திரைத் திருவிழா நடைபெற்றது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் திருவிழாவில் சித்திரை முதல் நாளான இன்று சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரருக்கு திருக்கல்யாணம் விழா நடந்தது.

தலைமை அர்ச்சகர் பாலசுப்ரமணியன் தலைமையில் விசேஷ பூஜைகளை நடத்தி அம்மனுக்கு பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்கார அபிஷேகங்களை செய்து மாங்கல்யத்தை அணிவித்தனர், விழாவில் கலந்து கொண்ட பெண்களும் தாங்கள் அணிந்திருந்த பழைய மாங்கல்யத்தை மாற்றி புதிய மாங்கல்ய கயிற்றை கழற்றி மாற்றிக் கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நதியா, மேலாளர் மோகன் உள்பட கோயில் நிர்வாகிகள் பலர் செய்திருந்தனர்.விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விழாவின் சிறப்பம்சமாக நாளை திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: சுதர்ஸன்

First published:

Tags: Tamil New Year, Theni