Home /local-news /

சின்னமனூர் : பல இடங்களில் விழிப்புணர்வு பலகை - சுகாதாரத்துறையினர் நேரடி ஆய்வு 

சின்னமனூர் : பல இடங்களில் விழிப்புணர்வு பலகை - சுகாதாரத்துறையினர் நேரடி ஆய்வு 

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சின்னமனூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களிடையே தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகளை வைத்துள்ளது நகராட்சி நிர்வாகம்.

    தொற்று பரவல் :-

    தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 300 -ஐ நெருங்கி செல்கிறது. மக்களிடையே தொற்று பரவும் விகிதத்தை குறைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கை அமல் படுத்தி இருந்தாலும், தேனி மாவட்ட மக்கள் ஊரடங்கு நேரத்தில் மட்டுமே முக கவசம் அணிந்து வெளியே செல்வதை பார்க்க முடிகிறது.

    சில மக்கள் ஊரடங்கு இல்லாத பகல் வேளைகளில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்கின்றனர். காவல் துறை, சுகாதாரத்துறை, நகராட்சி பணியாளர்கள் என பலர் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமலும் செல்லும் நபர்களை தொடர்ந்து எச்சரித்து அபராதமும் விதித்து வருகின்றனர்.

    மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி, சின்னமனூர, கம்பம் மற்றும் இதர பகுதிகளில் காவல் துறையினர் சார்பில் பொது இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது.

    விழிப்புணர்வு :-

    இந்த நிலையில், சின்னமனூர் பகுதியில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒன்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் உறுதிமொழி வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர் நகராட்சி அதிகாரிகளால் வைக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகையில், \" எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும், தடுப்பூசி செலுத்திய நகலை கையில் வைத்துக் கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு செய்திகளும், அதனைத் தொடர்ந்து, முக கவசம் அணியாமல் மற்றும் கட்டுப்பாட்டு நெறி முறைகளைக் கடைப்பிடிக்காமல் செல்லும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் குறித்த விவரமும் உள்ளடக்கியுள்ளது.

    மேலும் சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையர் சார்பில் பல இடங்களில் நேரடியாக ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறும் வணிக வளாகங்களுக்கு அபராதத்தையும் விதித்து வருகின்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி