Home /local-news /

போடிநாயக்கனூர் : கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த காவலர் - பகீர் சம்பவம்

போடிநாயக்கனூர் : கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த காவலர் - பகீர் சம்பவம்

மதுரையைச் சேர்ந்த சிறப்புக் காவல் படை காவலர் திருமுருகன் தனது கள்ள காதலியான வனக் காவலர் சரண்யாவை, கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளக்காதல் :-

    மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, தேனி மாவட்டம், தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராக பணிபுரிந்து வந்தார், இருபத்தி ஏழு வயதாகும் சரண்யா. இவர் போடி நாயக்கனூர் பகுதியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சரண்யாவின் கணவர், வாகன விபத்தில் இறந்துவிட்டார்.

    கணவர் இறந்து விட்டதால் இரண்டு பெண் குழந்தைகளும் , சரண்யாவின் பெற்றோர் வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சரண்யா மட்டும் போடி நாயக்கனூர் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

    சரண்யா மதுரையில் வசித்து வந்த போது, காவல்துறை பணியில் சேர்வதற்காக பயிற்சி வகுப்பில் பயின்று வந்து உள்ளார். அப்போது அதே பயிற்சி வகுப்பில் பயின்ற திருமுருகன் என்ற நபருடன் சரண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பயிற்சி வகுப்பு முடிந்த பின்பு சரண்யா வனத்துறையிலும் , திருமுருகன் சிறப்பு காவல்படை காவலராகவும் பணியில் சேர்ந்துள்ளனர்.

    பணியில் சேர்ந்த பின் இருவருக்கும் தனித்தனியாக திருமணம் நடைபெற்றுள்ளது. இருந்தபோதிலும் சரண்யாவுக்கும், திருமுருகனுக்கும் இடையேயான தொடர்பு நீடித்து வந்ததாக தெரிகிறது.

    கொலை சம்பவம் :-

    சரண்யாவின் கணவர் இறந்த பின்பு, சரண்யாவின் இரு குழந்தைகளும் அவரது பெற்றோர் வீட்டில் வளர்ந்து வந்த வேளையில், சரண்யாவுக்கும் திருமுருகனுக்கும் இடையேயான தொடர்பு அதிகரிக்க தொடங்கி, தனியாக இருக்கும் சரண்யா வீட்டிற்கு மதுரையைச் சேர்ந்த திருமுருகன் அடிக்கடி வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

    திருமுருகன் போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள சரண்யா வீட்டிற்கு சென்று வருவதை அறிந்த அவரது மனைவி திருமுருகனிடம் சண்டையிட்டு விட்டு தற்காலிகமாக பிரிந்து சென்றுள்ளார்.

    குடும்ப பிரச்சனை காரணமாக திருமுருகனின் மனைவி பிரிந்து சென்றதால், சரண்யாவை காண திருமுருகன் போடிநாயக்கனூரில் உள்ள சரண்யா வீட்டிற்கு நேற்று வந்துள்ளார்.

    அப்போது, சரண்யாவிடம் நடந்த சம்பவத்தை கூறிய திருமுருகன், சரண்யாவை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அப்போது திருமுருகனை திருமணம் செய்ய சரண்யா மறுப்பு தெரிவிக்கையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த திருமுருகன், சரண்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சரண்யாவை கொலை செய்த திருமுருகன் இன்று காலை மதுரையில் உள்ள கீரைத்துறை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    இதனை அடுத்து, மதுரை கீரைத்துறை காவல் நிலைய அதிகாரிகள் போடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போடிநாயக்கனூர் காவல்துறை அதிகாரிகள் சரண்யா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததை உறுதி செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போடி நகர் காவல்துறையினர், திருமுருகனை கைது செய்ய மதுரை விரைந்துள்ளனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி