Home /local-news /

போடிநாயக்கனூர் : தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு கமாண்டோ பயிற்சி 

போடிநாயக்கனூர் : தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு கமாண்டோ பயிற்சி 

போடிநாயக்கனூர்

போடிநாயக்கனூர் : தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு கமாண்டோ பயிற்சி 

இந்த சிறப்பு பயிற்சியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு சிறப்பு சீருடைகள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    போடிநாயக்கனூர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறை அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு கமாண்டோ பயிற்சி மற்றும் அவசர காலங்களில் துரிதமாக செயல்படுவது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது.

    சிறப்பு பயிற்சி :-

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் அமைந்துள்ள தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறை அலுவலகத்தில் பணியாற்றும் 25 தீயணைப்பு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பேரிடர் மீட்பு காலத்தில் துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபடுவது குறித்தும், மீட்புப் பணியில் ஈடுபடுவோர் ராணுவ வீரர்களுக்குரிய உத்வேகத்துடன் செயல்படும் வகையில் இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு பயிற்சியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு சிறப்பு சீருடைகள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    தேனி மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி கல்யாண் குமார், தேனி மாவட்ட துணை தீயணைப்பு நிலைய அதிகாரி குமரேசன், போடி தீயணைப்பு நிலைய அதிகாரி சக்திவேல், போடி தீயணைப்பு நிலைய அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் முகாமில் கலந்துகொண்ட வீரர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு தூத்துக்குடியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு பயிற்சியாளர் மைக்கேல் சிறப்பு பயிற்சி விளக்கம் மற்றும் செயல்முறை விளக்கம் அளித்து வருகிறார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி