போடிநாயக்கனூர் : கைலாய மேலசொக்கநாதர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
மிகவும் பழமை வாய்ந்த போடிநாயக்கனூர் பகுதியிலுள்ள கைலாய மேலசொக்கநாதர் ஆலயத்தில், தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மாலை வேளையில் அதிகளவிலான பக்தர்கள் குவிய தொடங்கினர்.
பழமையான கோவில்:-
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, பழமையான வரலாற்று சிறப்பு மிக்க கைலாய மேலசொக்கநாதர் ஆலயம்.
திருவண்ணாமலையில் உள்ள சிவாலயம்போலவே இக்கோயிலும் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ராகு, கேது பரிகாரத்திற்கு சிறந்த காளகஸ்தி போன்று அருகில் நீர்நிலை உடன் வாஸ்து முறைப்படி வாயு மூலையில் அமைந்துள்ளது.
இந்த கோவில் புற்றுகளால் சூழப்பட்டுள்ளதால் காளகஸ்தி போன்று வாயு மூலையில் நீர்நிலை அருகில் அமைந்த சிவாலயமாகவும் உள்ளதால் சிறந்த ராகு, கேது, பரிகார தலமாகவும் கால சர்ப்ப,தோஷம் ,நாக தோஷம், திருமண தடை நீக்கும் தலமாகவும் இந்த மேல சொக்கநாதர் கோவில் திகழ்கிறது.
ஒவ்வொரு அமாவாசை, பிரதோச நாட்களில் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தை அமாவாசை தினத்தை முன்னிட்டு காலை முதலே இந்த கோவிலில் அதிக அளவில் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தினால் அன்னதானமும் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.