Home /local-news /

தேனி : தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி - 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தேனி : தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி - 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தேனி

தேனி : தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Theni : தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு, தேனி நகரில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

    தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு, தேனி நகரில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

    தடுப்பூசி நாள் :-

    தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போலியோவிலிருந்து விடுபட இந்தியாவில் முதன்முதலாக 1995ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

    போலியோ சொட்டு மருந்து கொடுத்த தினமான மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், தடுப்பூசி குறித்தும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்தும் நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, தேனி நகரில், மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் ஸ்வஸ்தி நிறுவனம், தேனி மாவட்ட பெண்கள் சமூக பொருளாதார முன்னேற்ற சங்கம் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்தப் பேரணியானது தடுப்பூசி போட்டுக்கொள்வது, முகக்கவசம்
    அணிவது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற
    கருத்துக்களை வலியுறுத்தி நடத்தப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தேனி அரசினர் தொழில் பயிற்சி மையத்தின் பயிற்சி மாணவர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணியானது தேனி பங்களாமேடு முதல் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் வரை சென்றது.

    இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர், உதவி இயக்குனர், தேனி அரசினர் தொழில் பயிற்சி மையத்தின் முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தேனி மாவட்ட பெண்கள் சமூக பொருளாதார முன்னேற்ற சங்கம் மற்றும் தேனி அரசினர் தொழில் பயிற்சி மையத்தின் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Theni, Vaccination, Vaccine

    அடுத்த செய்தி