Home /local-news /

பெரியகுளம் : வாக்காளர்களை கவர மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல்

பெரியகுளம் : வாக்காளர்களை கவர மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல்

தேனி

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட மாட்டு வண்டியுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட மாட்டு வண்டியுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்

    தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட மாட்டு வண்டியுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்.

    வேட்புமனு தாக்கல் :-

    தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில், 16-வது வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த கிஷோர் பானு என்பவர் போட்டியிடுகிறார்.

    இவர் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய தென்கரை தண்டுபாளையம் தெருவிலிருந்து மாட்டு வண்டியுடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி, திமுக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஆகியோருடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தார்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகே 200 மீட்டர் இடைவெளியில் மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு, வேட்புமனு தாக்கல் செய்ய போலீசார் அறிவுறுத்தினர்.

    பின்னர் வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் மட்டுமே உள்ளே சென்று தேர்தல் அலுவலர் ஆனந்திடம் தனது வேட்பு மனுவினை அளித்தார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Local Body Election 2022, Theni

    அடுத்த செய்தி