Home /local-news /

பெரியகுளம் : ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் தாமரை பூக்களுடன் நடைபெற்ற அபிஷேகம்

பெரியகுளம் : ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் தாமரை பூக்களுடன் நடைபெற்ற அபிஷேகம்

Periyakulam

Periyakulam temple

Echamalai Mahalakshmi Temple : பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு தாமரை பூக்களுடன் மகாலட்சுமி சிவகாமி தாயாருக்கும் அதிகார நந்தீஸ்வரர், நாகராஜன் மற்றும் சிவபெருமானுக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
    பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு தாமரை பூக்களுடன் மகாலட்சுமி சிவகாமி தாயாருக்கும் அதிகார நந்தீஸ்வரர், நாகராஜன் மற்றும் சிவபெருமானுக்கு 5 வகை சாதனங்களுடன் புஷ்ப அபிஷேகமும் நடைபெற்றது.

    பிரதோஷ வழிபாடு :-

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் ஒவ்வொரு பிரதோஷத்தை முன்னிட்டும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இக்கோவில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் வந்து கோவிலில் வழிபட்டு செல்வர். பிரதோஷ நாளில் நடைபெறும் அபிஷேக வழிபாட்டை காண பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் இக்கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.

    இன்றைய பிரதோஷம் தினத்தை முன்னிட்டு மகாலட்சுமி கோவிலில் உள்ள அதிகார நந்தீஸ்வரன் சிலைக்கு மற்றும் நாகராஜர் சிவனுக்கு ஐந்து வகை சாதங்களை கொண்டும் பால் தயிர் பன்னீரைக் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது. தாமரை மலர்களால் அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சிவனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பிரதோஷ நாளில் சிவலிங்கத்தை வழிபடும்போது சிவனோட அருளும் நதீஸ்வரர் அருளும் கிடைக்கும் என்றும், மகாலட்சுமி கோவிலில் வழிபாடு செய்வதன் மூலம் நல்ல செல்வாக்கு கிடைக்கும் எனவும், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இதனால் ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் அதிகமான பக்தர்கள் கோவிலில் வழிபாடு நடத்தி செல்வது வழக்கமாக காணப்படுகிறது

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Temple, Theni

    அடுத்த செய்தி