Home /local-news /

PM CARES நிதியின் கீழ் கம்பம் அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சை பிரிவு

PM CARES நிதியின் கீழ் கம்பம் அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சை பிரிவு

கம்பம்

கம்பம் அரசு மருத்துவமனை

Cumbum GH : மத்திய அரசின் பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 'Critical Care Block' எனப்படும் அவசர சிகிச்சை பிரிவு அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

    PM CARES நிதியின் கீழ் கம்பம் அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சை பிரிவு

    மத்திய அரசின் பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 'Critical Care Block' எனப்படும் அவசர சிகிச்சை பிரிவு அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அவசர சிகிச்சை பிரிவு :-

    தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அரசு மருத்துவமனையில் தினமும் வெளிநோயாளிகளாக 2 ஆயிரம் பேர்களும், உள்நோயாளிகளாக 200க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, தீ விபத்து சிகிச்சை பிரிவு உட்பட பல்வேறு வகையான அவசர சிகிச்சைகளுக்கும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் வசதி உள்ளதால், தேனி மாவட்டத்தில் அதிகம் பிரசவம் பார்க்கும் மருத்துவமனைகளுள் கம்பம் அரசு மருத்துவமனையும் ஒன்றாக உள்ளது.

    கம்பம் அரசு மருத்துவமனையில் கம்பம் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் பிரசவத்திற்கு வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய அரசின் பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் இங்கு ரூ.20 கோடி செலவில் 'கிரிட்டிகல் கேர் பிளாக்' அமைக்க அனுமதி கிடைத்துள்ளது.

    இதில் ஆறு மாடி கட்டடம் கட்டப்பட்டு அவசர நிலையில் உயிருக்கு போராடுவோர், அவசர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளோர் உடனடியாக சிகிச்சை பெற முடியும். மேலும் சிடி ஸ்கேன், மற்றும் பல நவீன மருத்துவ எந்திரங்கள் இப் பிரிவில் அமைக்கப்பட உள்ளது.

    இதனால் தீவிர சிகிச்சைக்கு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று மருத்துவ அலுவலர் பொன்னரசன் கூறியுள்ளார்.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது எனவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் பணிகள் தொடங்கும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Cumbum, PM Cares, Theni

    அடுத்த செய்தி