Home /local-news /

தேனியில் கட்சி வளர்ச்சி பணியில் சுறுசுறுப்பு காட்டும் அமமுக.. பி.சி.பட்டி தேர்தல் வெற்றியால் உற்சாகம்..

தேனியில் கட்சி வளர்ச்சி பணியில் சுறுசுறுப்பு காட்டும் அமமுக.. பி.சி.பட்டி தேர்தல் வெற்றியால் உற்சாகம்..

AMMK

AMMK Party

Theni AMMK | உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. தேனி பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியையும் அமமுக கைப்பற்றியது

    தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக செயல்பாடுகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் தேனியில் அமமுக சார்பில் கழக வளர்ச்சி பணி மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    கட்சிக் கூட்டம் :-

    தேனி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் கழக வளர்ச்சி பணி மற்றும் நிர்வாகிகள் கூட்டம் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    தமிழகத்தில் நடைபெற்ற கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. தேனி பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியையும் அமமுக கைப்பற்றியது. தேனி மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தும், தேனி மாவட்டத்தில் அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றியதை தொடர்ந்தும் புது உற்சாகம் பெற்ற அமமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    இதில் அமமுக கட்சியின் வளர்ச்சி பாதை பற்றியும், கட்சித் தலைமை சார்பாக கூறப்பட்டுள்ள நடவடிக்கைகளை பின்பற்றுவது குறித்தும் முழுமையாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேனி நகர செயலாளர் காசிமாயன் வரவேற்புரை வழங்கினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட , ஒன்றிய, பேரூர் நகர, கிளை கழக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி