Home /local-news /

மங்கலதேவி கண்ணகி கோவில் விழாவை முன்னிட்டு தேனியில் நாளை உள்ளூர் விடுமுறை

மங்கலதேவி கண்ணகி கோவில் விழாவை முன்னிட்டு தேனியில் நாளை உள்ளூர் விடுமுறை

Kannagi temple

Kannagi temple

Mangaladevi Kannagi Amman Temple | தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, நாளை (16/4/22) மாவட்ட நிர்வாகம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  

மேலும் படிக்கவும் ...
    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா  நடைபெறவுள்ளதை முன்னிட்டு, நாளை (16/4/22) மாவட்ட நிர்வாகம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கண்ணகி கோவில் :-

    தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலா விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் . வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்ணகி கோவில் சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில்  செய்யப்பட்டது .

    தமிழக கேரள மலைப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் கோவில் திருவிழா நடைபெறுவதற்கு முன் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர், இரு மாநில வனத்துறை அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதில் கோவில் திருவிழா கொண்டாடப்படுவதற்கான பல முக்கிய முடிவு எடுக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது

    இதனையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி (நாளை ) கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடைபெற உள்ளது.

    சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று தமிழகம் மற்றும் கேரள பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தமிழகம் மற்றும் கேரள பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழக மற்றும் கேரள மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற சித்திரை முழு நிலவு கண்ணகி கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டத்தில் சித்திரை முழுநிலவு விழா கொண்டாடப்பட உள்ள தினமான 16ஆம் தேதி ( 16.04.2022 சனிக்கிழமை) நடைபெறும் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் 07.05.2022 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும்.

    மேலும், மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி