Home /local-news /

தேனி : 5 வயதிலேயே 1,330 திருக்குறள்களை ஒப்பித்து பரிசுகளை குவிக்கும் சிறுமி

தேனி : 5 வயதிலேயே 1,330 திருக்குறள்களை ஒப்பித்து பரிசுகளை குவிக்கும் சிறுமி

5 வயதிலேயே 1,330 திருக்குறள்களை எளிதாக ஒப்பித்து பரிசுகளை குவிக்கும் சிறுமி 

5 வயதிலேயே 1,330 திருக்குறள்களை எளிதாக ஒப்பித்து பரிசுகளை குவிக்கும் சிறுமி 

தேனி : 5 வயதிலேயே 1,330 திருக்குறள்களை எளிதாக ஒப்பித்து பரிசுகளை குவிக்கும் சிறுமி 

    தேனி மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் இரட்டை குழந்தைகள் மற்றும் ஐந்து வயதான குழந்தை ஆகிய மூவரும் 1330 திருக்குறளையும் ஒப்பித்து பல போட்டிகளில் பங்கேற்று தொடர்ச்சியாக பரிசுகளை குவித்து வருகின்றனர்.

    குழந்தையின் திறமை :-

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மறவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏழாம் வகுப்பு படிக்கும் முத்தமிழ் சாமினி, செந்தமிழ் சாலினி என்ற இரட்டை குழந்தைகள். இக்குழந்தைகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி கற்று வருகின்றனர்.

    இவர்கள் 1,330 திருக்குறள்களை எளிதாக ஒப்பிக்கும் திறமையை பெற்றுள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளும் 1330 திருக்குறளை முழுமையாக ஒப்பிகின்றனர். எந்த அதிகாரத்தை கேட்டாலும் சொல்கிறார். எந்த சொல்லில் இருந்து கேட்டாலும், குறள் முடியும் சொல் கேட்டாலும் ஒப்பித்து அசத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து, திருப்பாவை, தொல்காப்பியம், திருவாசகம் என பல தமிழ் நூல்களையும் கற்று ஒப்பிகின்றனர்.

    இந்த இரண்டு குழந்தைகளுக்கும் 5 வயதில் பைந்தமிழ் ரோசினி என்ற தங்கச்சியும் உள்ளார். 5 வயதே ஆன பைந்தமிழ் ரோசினி என்ற குழந்தை இன்னும் பள்ளி செல்ல வில்லை. ஆனால் தனது தாயின் பயிற்சி மற்றும் இரு சகோதரிகளின் முயற்சியின் மூலம் 1330 திருக்குறள்களை ஒப்பித்து அசத்துகிறார். முத்தமிழ் சாமினி,
    செந்தமிழ் சாலினி மற்றும் பைந்தமிழ் ரோசினி ஆகிய மூன்று குழந்தைகளும் பள்ளி பொதுமேடை, தமிழ் சங்கம் நடத்தும் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பெற்று உள்ளனர்.

    பரிசுகளை குவிக்கும் குழந்தைகள் :-

    சமீபத்தில் நடந்த, தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 1330 திருக்குறளையும் ஒப்புவித்து இந்த மூன்று குழந்தைகளும் வெற்றி பெற்றுள்ளனர். மூவருக்கும் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சான்றிதழும், பரிசுத் தொகைக்கான காசோலையும், திருக்குறள் நூலும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் "உலகத் தமிழ் கூடல்" சார்பில் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி இணைய வழியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியானது கவிஞர் லட்சுமி குமரேசன், கவிஞர் செல்வராணி தலைமையில் நடைபெற்றது . வெற்றி பெற்றவர்களைத் தாண்டி கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

    இந்த போட்டியிலும், பைந்தமிழ் ரோசினி வெற்றி பெற்று பங்கேற்புச் சான்றிதழும், செந்தமிழ்த் தேனி செயராமனார் வழங்கிய சிறப்பு பரிசும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

    அரசு மற்றும் வெளி இடங்களில் நடைபெறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியான வெற்றியை பெறும் 3 சிறுமிகளையும் தேனி மாவட்ட மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி