பாம்பன் சாலை பாலத்தில் இருசக்கர வாகனமும், காரும் மோதியதில் ஒருவர் கடலுக்குள் விழுந்ததார், இரண்டு பேருக்கு கால் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காரைக்குடி பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் ராமேஸ்வரம் வருகை தந்து ராமநாதசுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுகொண்டிருந்தனர்.
இதையடுத்து, மண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்த காரும் மண்டபத்தில் இருந்து மீன்பிடித் தடை காலத்தில் படகு பராமரிப்பதற்காக பாம்பன் நோக்கி வந்த 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பாம்பன் சாலை பாலத்தில் வேகமாக வந்த போது கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மண்டபத்தில் இருந்து பைக்கில் வந்த இருவரில் ஒருவர் கடலுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் பாலத்திலிருந்து கயிறுகளை கடலுக்குள் வீசி கடலில் விழுந்தவர் கயிற்றைப் பிடித்து காப்பாற்றினார், அதனை அடுத்து அங்கு இருந்த நாட்டுப்படகு மீனவர்கள் உதவியுடன் நாட்டுப் படகில் வந்து கடலில் அந்த நபரை மீட்டனர்.
பைக்கில் வந்த இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து இருவரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் மண்டபம் பகுதியை சேர்ந்த நாராயணன் மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
அதிர்ஷ்டவசமாக காரில் வந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட எந்த ஒரு காயங்கள் இன்றியும் உயிர் தப்பினர்.இதனையடுத்து பாம்பன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாம்பன் சாலை பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், அதிவேகத்தில் வரும் வாகனம் காரணமாகவும் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகின்றது, உடனடியாக பாம்பன் பாலத்தில் கூடுதல் காவல் துறையினரை நியமித்து பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி வானங்கள் இந்த பகுதியில் நிறுத்தாமளும், வாகனங்கள் வேகமாக செல்லாமலும் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.