வெளிநாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்று கடலில் விழுந்து இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரவும், மூன்று குழந்தைகளுடன் தவிக்கும் தனக்கு நிவாரணம் வழங்கி உதவிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் பாசிப்பட்டணத்தைச் சேர்ந்த மீனவர் கண்ணுச்சாமி (37). இவரது மனைவி வனிதா (34), இவர்களுக்கு கஜேந்திரன் (13), கீதா (11) மற்றும் பிரீத்தி (10) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2019–ம் ஆண்டு கண்ணுச்சாமி மீன்பிடித் தொழிலுக்காக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியார் மீன்பிடி நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், அவர் கடந்த 2ஆம் தேதி வாஹில் எனும் பகுதியில் கடலில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடலில் விழுந்த அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி சடலமாகவே மீட்டுள்ளனர். இது குறித்து, கண்ணுச்சாமி மனைவி வனிதாவுக்கு கணவர் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கணவர் உடலை சொந்த ஊருக்கு மீட்டு வரவும், கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் தவிக்கும் தனக்கு நிவாரணம் வழங்கி உதவிடுமாறும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வனிதா மூன்று குழந்தைகளுடன் வந்து மனு அளித்தார்.
செய்தியாளர்: பூ. மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.