ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வொயிட் கோட்மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிவிக்கும் விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடந்து முடிந்த பிறகு முதலாமாண்டு மாணவர்களுக்கு வொயிட் கோட் மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிவிக்கப்பட்டது.
முதல் கவுன்சிலிங் நடந்து முடிந்த நிலையில் முதலாம் ஆண்டில் இதுவரையிலும் 89 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இரண்டாம் கவுன்சிலிங் தற்போது நடந்து கொண்டிருக்கிறது அதில் 11 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.இதையடுத்து, மொத்தமாக முதலாம் ஆண்டில் 100 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இன்று மருத்துவ கல்லூரியில் முதல் முதலாக இந்நிகழ்ச்சி கொண்டாடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் முதலாமாண்டு மாணவர்களின் சேர்க்கை நடைபெற்ற பின் வொயிட் கோட் மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிவிக்கும் விழா நடைபெறுவது வழக்கம் என்று கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறுகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.