Home /local-news /

நூல் விலை உயர்வு... பரமக்குடியில் நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

நூல் விலை உயர்வு... பரமக்குடியில் நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Ramanathapuram : நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் பரமக்குடியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரியும் மற்றும் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் பரமக்குடியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, எமனேஸ்வரம், சோமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர்

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நெசவு தொழில் நலிவடைந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில், கடந்த ஓராண்டு காலமாக அசல் பட்டு நூல் விலை மிகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அசல் பட்டு மற்றும் ஜரிகை விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், ஜி.எஸ்.டி வரியை முழுவதும் நீக்க கோரியும், அசல் பட்டை இறக்குமதி செய்யக் கோரியும், 60 வயது அடைந்த அனைத்து நெசவாளர்களுக்கு ரூ, 3000 ஓய்வு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, அனைத்து கைத்தறி நெசவாளர் தொழிற்சங்கங்கள் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் செய்தனர்.

    சுமார் 400க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் கேசவ ராமன் தலைமை வைத்தார். மத்திய, மாநில அரசுகள் அசல் பட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையென்றால் விரைவில் நெசவாளர்கள் கஞ்சித்தொட்டி போராட்டம் நடத்த இருப்பதாக போராட்டக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Protest, Ramanathapuram

    அடுத்த செய்தி