Home /local-news /

ராமநாதபுரம்: வாக்காளர் பட்டியல் வெளியீடு - நகராட்சியில் சரிபார்க்கலாம்

ராமநாதபுரம்: வாக்காளர் பட்டியல் வெளியீடு - நகராட்சியில் சரிபார்க்கலாம்

இராமநாதபுரம்: வாக்காளர் பட்டியல் வெளியீடு - நகராட்சியில் சரிபார்க்கலாம்

இராமநாதபுரம்: வாக்காளர் பட்டியல் வெளியீடு - நகராட்சியில் சரிபார்க்கலாம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் கடந்த ஆண்டு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

    ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளின் வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. சரிபார்க்க விரும்பும் மக்கள் சரிபார்த்து கொள்ளலாம்.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் கடந்த ஆண்டு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர், வார்டு வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது, அதில் சில தவறுதல்கள் இருந்ததால் சரிபார்க்கபட்டு, தற்போது புதிய வாக்காளர்கள் பட்டியல் இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில வார்டுகளின் பதிவுகளில் தவறுதலாக வேறு வார்டுகளில் வாக்காளர் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், இரட்டை பதிவுகள் உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தில் சிறப்பு அனுமதி பெறப்பட்டு, தவறுதலாக உள்ள வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்யும் பணி முடியும் தருவாயில் உள்ளது.

    இறுதியாக வெளியிடப்பட்ட பட்டியலின்படி 33 வார்டுகளிலும் 22,032 ஆண்கள் மற்றும் 29,657 பெண்கள் , இதரர் 12 என ஆக மொத்தம் 57,701 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக பெயர் சேர்த்தவர்கள், முகவரி மாற்றம் செய்யப்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யலாம் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி