Home /local-news /

ஏழை பெண்ணின் திருமணத்திற்கு சீர்வரிசைகள் வழங்கி உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!

ஏழை பெண்ணின் திருமணத்திற்கு சீர்வரிசைகள் வழங்கி உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!

ஏழை

ஏழை பெண்ணின் திருமணத்திற்கு சீர்வரிசைகள் வழங்கி உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!

Vijay Makkal Iyakkam : விஜய் மக்கள் இயக்கத்தினரின் சார்பில் ராமேஸ்வரத்தில் ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

    ராமேஸ்வரம் எஸ்.கே. பட்டியை சேர்ந்தவர் தரக்கூடியான் மற்றும் பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தப் பெண் குழந்தைகளில் மாலதி என்ற ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதைத் அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், அப்பெண்ணின் திருமணத்துக்கு தங்களால் ஆன உதவிகளை செய்ய முடிவெடுத்தனர்.

    அதன்படி, நகர் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தினர், கட்டில், பீரோ மெத்தை, உள்ளிட்ட ஏராளமான சீர்வரிசை பொருட்களை மணமகள் வீட்டாரின் குடும்பத்தினருக்கு திருமண நாளான நேற்று நேரடியாக வீட்டுக்கு சென்று வழங்கினர்.

    மேலும் மாதம் தோறும் இந்த குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளையும் செய்து தருவதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உறுதி அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நகர் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கோபி சாரதி, பொருளாளர் மணி, மற்றும் விஜய் பாலா, தொண்டரணி ஏராளமானோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார். விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த செயலால் அப்பெண்ணின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியடைந்தனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Marriage, Ramanathapuram, Vijay makkal iyakkam

    அடுத்த செய்தி