ராமேஸ்வரம் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் வசதி இல்லாததால் சிகிச்சைக்காக செல்லும் கால்நடைகளுக்கு போதிய சிகிச்சை இல்லாமல் இறப்பதாக கால்நடை வளர்பவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரத்துக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர், இவ்வாறு வரும் பக்தர்கள் தமது நேர்த்திக் கடனாக ஆடு மாடுகளை கோவிலுக்கு நேர்ந்துவிட்ட செல்வது வழக்கம், இவ்வாறு நேர்ந்து விடப்படும் கால்நடைகள் விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதி இல்லாமல் உள்ளது கால்நடை மருத்துவமனை.
ராமேஸ்வரத்தை சுற்றி உள்ள கிராமங்களில் ஏராளமான கால்நடைகளை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர். அவ்வாறு வளர்க்கும் கால்நடைகளுக்கு பூச்சிக்கடி போன்ற நோய்த்தொற்று ஏற்பட்டு கொண்டு சென்றால் மருத்துவர் பற்றாக்குறையால், தொலைபேசி மூலமாக ராமநாதபுரம் கால்நடை மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு சிகிச்சை அளிப்பதாகவும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு தெரிந்த அளவு சிகிச்சைகூட அங்குள்ள செவிலியர்களுக்கு தெரியவில்லை என்று கூறிகின்றனர்.
இதுகுறித்து குட்டிமணி அவர்கள் கூறியதாவது, கால்நடைகள் வைத்து தொழில் செய்து வாழ்வாதாரம் நடத்துகிறேன், ராமேஸ்வரம் கால்நடை மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மருத்துவ உபகரணங்களும் மற்றும் மருந்துகளும் உடனடியாக கிடைப்பதில்லை, நிரந்தர மருத்துவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவர் கூட பணி அமர்த்தப்படவில்லை.
செவிலியர் மட்டும் இருப்பதால் எந்நேரமும் சென்றாலும் சென்று விட்டு அப்புறம் வாருங்கள் நாளைக்கு வாருங்கள் மருந்து இல்லை என்ற சாக்கு போக்கு காரணங்கள் கூறுகின்றனர். கால்நடை வளர்ப்போர் எங்களுக்கு தெரிந்த அளவு வைத்தியம் கூட கால்நடை செவிலியர்களுக்கு தெரியவில்லை.
சென்ற ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைக்காலத்தில் 100க்கும் மேற்பட்ட ஆடு மாடுகள் சாலை ஓரத்தில் இறந்து கிடந்தன. முறையான சிகிச்சை இல்லாமல் தான் ஆடு மாடுகள் இருந்தன.
உடனடியாக மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகம் பிரச்சனையை கையில் எடுத்து ஒரு நிரந்தர மருத்துவரை பணி அமர்த்திக் கால்நடை வளர்ப்பவர்களுக்கு உதவி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.