Home /News /local-news /

இராமநாதபுரம்: காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பணி

இராமநாதபுரம்: காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பணி

Ramanathapuram  : இராமநாதபுரம் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 128 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

Ramanathapuram : இராமநாதபுரம் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 128 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

Ramanathapuram : இராமநாதபுரம் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 128 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் நலஅலுவலர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் காலதாமதம் ஏற்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    இராமநாதபுரம் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 128 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில், 22 ஆயிரத்து 14 பேர் மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.

    வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் புதிய அடையாள அட்டை வழங்க விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இதுவரையிலும் ஸ்மார்ட் கார்ட் பெற 19,314 பேர் விண்ணப்பித்துள்ளனர். 4,623 பேருக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூபாய் 1,500 வழங்கப்படுகிறது.

    மாதந்தோறும் வார நாட்களான செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் 6 வயது வரை உள்ள குழந்தைகளை வீடு தேடி சென்று தசை பயிற்சி வழங்கப்படுகிறது.

    இவ்வாறு நடைபெறும் பணிகளை கண்காணிக்க வேண்டிய மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் நல அலுவலர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் பலமுறை வந்து செல்ல வேண்டியுள்ளது என பயனாளிகள் புகார் கூறுகின்றனர்.

    ஆனால், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கூடுதல் பொறுப்பாக வாரத்தில் ஓரிரு நாட்கள் வந்து செல்கின்றார். ஆகையால், இராமநாதபுரத்தில் காலியாக உள்ள மாற்றுத் திறனாளிகளின் நல அலுவலர் பணியிடத்தை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி