இ
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :-
வாக்களிக்கும் நாளில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு என தனித்தனி வரிசைகள் அமைக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும், வரிசையில் வாக்காளர்கள் நிற்பதற்கும் குறியீடு அமைக்க வேண்டும்.
வாக்குச்சாவடிக்குள் நுழையும் அனைவரும் முககவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்களிக்கும் நாளில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும், முகவர்களும் முககவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ளுங்கள்.
கொரோனா அறிகுறிகளுடன் அதிக உடல் வெப்பநிலை இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு வழக்கமான வாக்குப்பதிவு முடிந்தவுடன் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில், கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.