Home /local-news /

பரமக்குடி மரங்கள் சரணாலயத்தில் மரக்கன்றுகள் நட்ட மத்திய இணை அமைச்சர்

பரமக்குடி மரங்கள் சரணாலயத்தில் மரக்கன்றுகள் நட்ட மத்திய இணை அமைச்சர்

மரங்கள் சரணாலயத்தை பார்வையிட மத்திய இணை அமைச்சர்

மரங்கள் சரணாலயத்தை பார்வையிட மத்திய இணை அமைச்சர்

Ramanathapuram | தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உரப்புளி ஊராட்சியில் மட்டும்தான் மரங்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு அழிந்து வரும் அரிய வகை மரங்கள் வளர்க்கப்படுகிறது.

    சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி பரமக்குடியில் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாற்றாங்கால் அமைக்கும் பணியை பார்வையிட்டார். பின், மரங்கள் சரணாலயத்தை பலவிதமான மரக்கன்றுகள் அமைக்கப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் உரப்புளி, அரியனேந்தல் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 64.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட நாற்றாங்கால் பண்ணை மற்றும் குறுங்காடுகள் அமைக்கும் பணியினை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஒன்றிய இணை அமைச்சர் ஏ.நாராயணசுவாமி பார்வையிட்டார்.



    தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உரப்புளி ஊராட்சியில் மட்டும்தான் மரங்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு அழிந்து வரும் அரிய வகை மரங்கள் வளர்க்கப்படுகிறது.

    இதனை மத்திய இணை அமைச்சர் பார்வையிட்டு பலவிதமான மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி