Home /News /local-news /

இராமநாதசுவாமி கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி தொடக்கம்

இராமநாதசுவாமி கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி தொடக்கம்

உண்டியல்

உண்டியல் பணம் எண்ணும் பணி

இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலில் 2 மாதங்களுக்கு பிறகு உண்டியல் பணம் எண்ணும் பணி நடைபெற்றது.

    இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலில் 2 மாதங்களுக்கு பிறகு உண்டியல் பணம் எண்ணும் பணி கோவில் மண்டபத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    உலகப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி திருக்கோவிலில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, 2 மாதங்களில் கோவில் உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி இன்று கோவிலின் மண்டபத்தில் நடைபெற்றது.

    இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில், நம்புநாயகி அம்மன் கோவில், இராமர் தீர்த்தம், இலட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் மூலம் பெறப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் கொண்டு வரப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் இராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி