உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அடுத்த உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் பீச் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்று சென்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் அரியமான் கடற்கரையில் குடியிருக்கும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கல்யாண வைபவம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் நாகேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில், நடைபெற்றது.
ஆதித்யா குரூப்ஸ் செந்தில்வேல் மற்றும் டிரஸ்டி பலனிவேல் ஆகியோர் முன்னிலைவகித்தனர், அருள்மிகு மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் அக்னி குண்டம் முன்பாக மாலை மாற்றி தாலி அணிந்து திருமணம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்தனர். கோவில் நிர்வாகம் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.