மண்டபம் அடுத்த வலையர்வாடி பகுதியில் வீட்டிற்குள் கஞ்சா விற்றவரை காவல்துறையினர் பிடிக்க சென்ற போது வீட்டின் பின்பக்க சுவர் வழியாக குற்றவாளி தப்பி ஓட்டம்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வலையர்வாடி பகுதியில் வீட்டிற்குள் கஞ்சா விற்பதாக மண்டபம் ஆய்வாளர் ஜீவரெத்தினம் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைதொடர்ந்து, துணை ஆய்வாளர் கோட்டைச்சாமி மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்றனர்.
இந்நிலையில், கஞ்சா விற்ற குட்டி என்பவரை அடையாளம் கண்டு விசாரணைக்காக பிடிக்க முயலும் போது, குற்றவாளியான குட்டி தனது வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து தப்பித்து சென்றுவிட்டார்.
இதையடுத்து, குட்டியின் வீட்டை காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த சாக்கு பையில் 2 கிலோ கஞ்சா பொட்டலமாக இருந்துள்ளது.
இந்நிலையில், கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் கைப்பற்றி, மண்டபம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தப்பித்து சென்ற குட்டியை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.