Home /local-news /

ராமநாதபுரம்:  துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டு காவலர்கள் முதலிடம் - எஸ்.பி பாராட்டு

தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் இராமநாதபுரம் மாவட்டம் பெண் காவலர்கள் முதலிடம் பிடித்தனர்.

    தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியானது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒத்திவாக்கத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏர்வாடி தர்ஹா கிரேடு 1 காவல் நிலையம் பெண்காவலர் ராமலெட்சுமியும், இராமேஸ்வரம் கோவில் காவல்நிலையம் ஜீனிதா இருவரும் பங்கேற்றனர்.

    இருகாவலர்களும் பங்கேற்ற போட்டியில், 100 யார்டு மற்றும் 300 யார்டு பிரிவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். இருவரும் நடக்க உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியிலும் பங்கேற்க உள்ளனர்.

    இராமநாதபுரம் காவலர்களுக்கு பெரும் சேர்த்த இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் வெகுவாக பாராட்டினார்.

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.

    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி