Home /local-news /

ராமநாதபுரத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.!

ராமநாதபுரத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.!

ராமநாதபுரத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

பக்தர்கள் படை சூழ பூப்பல்லக்கில் கள்ளழகர் நீலக் கலர் பட்டு உடுத்தி பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கினார்.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம், பரமக்குடி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கியது இருந்து ஆர்.எஸ்.மங்களம் பேருந்து நிலையம் மேற்கூரை இடிந்து விழுந்தது வரை காண்போம்.

  நாடு செழிக்க நீலநிறப்பட்டில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படை சூழ பூப்பல்லக்கில் கள்ளழகர் நீலக் கலர் பட்டு உடுத்தி பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கினார்.

  பெருமாள் நீல நிற பட்டுத்தி கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டார். அதிகாலை 4:00 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

  அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என கோ‌ஷமிட்டு கள்ளழகரை தரிசித்தனர் சென்றனர்

  பழமைவாய்ந்த கலங்கரை விளக்கத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க கோரிக்கை

  பாம்பனில் உள்ள 127– ஆண்டுகள் பழமைவாய்ந்த கலங்கரை விளக்கத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்கவும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கும், தனிநபர் ஒருவர் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் மன்சுக் மாண்டவியா கோரிக்கை விடுத்துள்ளார்.

  58– வயது முதியவர் கண்மாயில் மூழ்கி பலியானார்

  ராமநாதபுரம் கே.கே.நகரைச் சேர்ந்த ராஜன் (58) என்பவர் பெரிய கண்மாயில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது ஆழமான பகுதியில் மாட்டி மூச்சுத்திணறி பலியானார்.

  சாயல்குடியில் போட்டி தேர்வு கருத்தரங்கு நடைபெற்றது

  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடியில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் கருத்தரங்கம் நடைபெற்றது.மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகளை வழங்கப்பட்டது.

  அரசு மருத்துவமனையில் மருத்துவ கல்லூரியில் காவல் நிலையம் அமைக்க வழியுறுத்தல்

  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவ்வபோது திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும், மது, கஞ்சா போன்றவை சகஜமாக விற்பனை சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும்,

  இதுதவிர, நாள்தோறும் உடலை வாங்க மறுத்து போராட்டங்கள், சாலை மறியல், பிரேத பரிசோதனை செய்ய மறுப்பு, சிகிச்சை குறித்த குற்றச்சாட்டு, டாக்டர்கள், ஊழியர்களின் போராட்டம் என அவ்வப்போது நடந்து வருகிறது. இதனால் தனியாக காவல்நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  ஆர்.எஸ்.மங்களம் பேருந்து நிலைய மேற்கூரை விழுந்தது

  ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சிக்கு சொந்தமான சேதுபதி பேருந்து நிலையம் 13 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும், திடீரென்று நடை பாதையின் மேல் இருந்த மேற்கூரையின் சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அங்கு பயணிகள் யாரும் நிற்கவில்லை இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.

  ராமநாதபுரம் விவசாயிகளுடன் முதல்வர் கலந்துரையாடல் நடைபெற்றது

  புதிதாக மின் இணைப்பு பெற்ற ராமநாதபுரம் விவசாயிகளுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகத்திலிருந்து முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இருந்த விவசாயிகளிடம் காணொளி காட்சி மூலமாக கலந்துரையாடி நிகழ்ச்சி நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

  வானிலை அறிக்கை

  பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்

  காற்றின் வேகம்: 28 முதல் 46 கிமீ/ம வரை

  காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு மழைக்கான வாய்ப்பு இல்லை

  இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

  கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் உள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்றைய விலையே இன்றும் நீடிக்கிறது.

  ராமநாதபுரம்
  பெட்ரோல்–112.45, டீசல்– 102.19
  ராமேஸ்வரம்

  பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88
  பரமக்குடி

  பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41
  திருவாடானை
  பெட்ரோல்– 112.31, டீசல்–102.41

  செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Ramanathapuram

  அடுத்த செய்தி