Home /local-news /

7 ஊர்கூடி இழுத்த தேர்.. திருவிழாவில் நகை திருட்டு... ராமநாதபுரம் மாவட்ட முக்கிய செய்திகள்.!

7 ஊர்கூடி இழுத்த தேர்.. திருவிழாவில் நகை திருட்டு... ராமநாதபுரம் மாவட்ட முக்கிய செய்திகள்.!

Ramanathapuram District Headlines

Ramanathapuram District Headlines

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்  ஒருசில வரிகளில் காண்போம், புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்வு முதல் 24 மணி நேரமும் இலவச உணவு வழங்குவதற்காக திறக்கப்படும் மடம்

மேலும் படிக்கவும் ...
    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம், புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்வு முதல் 24 மணி நேரமும் இலவச உணவு வழங்குவதற்காக திறக்கப்படும் மடம் வரை காண்போம்..

    புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது

    ராமேஸ்வரம் அடுத்த போல இருக்குடா அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சார்பாக புனித வெள்ளியை முன்னிட்டு இயேசு சிலுவை பாதை நிகழ்வு நடைபெற்றது இதில் இயேசுவின் மற்றும் யூதர்கள் போன்று வேடமணிந்து இயேசு சிலுவையைத் தூக்கிச் செல்வதும் யூதர்கள் அவரை அடிப்பது போன்ற காட்சிகள் நடைபெற்றன.

    ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    புதிய கட்டணங்களை நீக்கி பழைய கட்டண வழிமுறையை கொண்டுவர ஆர்ப்பாட்டம்

    ஆட்டோ ஓட்டும் தொழிலை பாதுகாக்க கோரி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஏஐடியுசி கட்சியினர் சார்பில சில கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதிய வாகன கட்டணங்களை நீக்கு பழைய வாகன கட்டணங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கோரிக்கை

    24 மணி நேரம் அன்னதானம் மடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

    ராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா பகுதியில் ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இடைவெளி இல்லா உணவு வழங்க மடம் அமைப்பதற்கு இன்று ஸ்ரீமத் சிவ சேதுராமன் முருகவேல் அன்னதான மடம்அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

    கோவில் திருவிழாவில் நகை திருட முயன்ற இரண்டு பெண்கள் கைது.

    ராமநாதபுரத்தில் நடைபெற்ற சித்திரை திருவிழாவை பயன்படுத்தி அங்கு வந்த பக்தர்களிடம் நகையை பறிக்க முயன்ற இரண்டு பெண்கள் லட்சுமி (40),சாந்தா (36) அங்கு கூடியிருந்த பக்தர்கள் பிடித்து ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கும் போது கழுத்தில் இருந்த நகை திருட்டு.

    தொண்டி அருகே உள்ள கண்கொள்ளான் பட்டினம் ராஜ நந்தினி என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் இருந்த தங்கச் செயினை திருடி விட்டுச் சென்றதாக தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

    கமுதி: 7 கிராமமக்கள் ஒன்றிணைந்த ஏர் உழும் திருவிழா

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஏழை கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக ஏர் கலப்பையை எடுத்து சென்று ஏர் உழும் திருவிழா நடைபெற்றது.

    பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் வந்தவர் கடலில் விழுந்து பலி

    திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்து கொண்டிருந்த ரயிலில் பாம்பன் பாலத்தின் அழகை ரசிக்க ரயிலின் கதவு ஓரமாக நின்று கொண்டிருந்தவர் வழுக்கி கடலில் விழுந்து பலியானார். இதனை அறிந்த அப்பகுதி மீனவர்கள் விரைந்து கடலுக்குள் சென்று அவரை மீட்டனர் ஆனால் அவர் அதற்குள் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    வானிலை அறிக்கை

    பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்

    காற்றின் வேகம்: 22முதல் 46 கிமீ/ம வரை

    காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது

    இன்றைய (15.04.2022) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

    கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் உள்ளது. ராமநாதபுரத்திலும் நேற்றைய விலையே இன்றும் நீடிக்கிறது.

    ராமநாதபுரம்
    பெட்ரோல்–112.45, டீசல்– 102.19

    ராமேஸ்வரம்
    பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88

    பரமக்குடி

    பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41

    திருவாடானை
    பெட்ரோல்– 112.31, டீசல்–102.41

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி