ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம், நிலம் இல்லாத விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முதல் ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனம் எரித்தது வரை காண்போம்.
நிலம் இல்லாத விவசாயிகளுக்கு ;திறன் மேம்பாட்டு பயிற்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில் 40 விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது 30 நாட்கள் ராமநாதபுரம் தோட்டக்கலைதுறையில் உள்ள பாலை பூங்காவில் நடைபெறுகிறது.
திருவாடானையில் பூக்குழி திருவிழா நடைபெற்றது
திருவாடானை அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில்,
காவடி எடுத்து, பால் குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தி பக்தர்கள் சென்றனர்.
குரான் ஓதும் போட்டி பரிசுகள் வழங்கப்பட்டது
மண்டபம் அடுத்த இருமேனி கிராமத்தில் கைராத்துல் அஸீஸிய்யா அரபி பாடசாலையின் 135-வது ஆண்டுவிழா மற்றும் புனித லைலத்துல் கத்ரு இரவை யொட்டி மாணவ-மாணவிகளுக்கான குரான் ஓதும் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் மாணவி அப்ரா இல்மியா முதல் பரிசை வென்றார். மாணவி நஜ்வா 2-ம் பரிசையும், மாணவர் சீனி ஹசனுதீன் மூன்றாம் பரிசையும் வென்றனர்.
தனியார் ஆம்னி பஸ் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ் பேருந்து ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என ராமநாதபுரத்தில் பேருந்தின் முன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கேணிக்கரை காவல் நிலையம் காவலர்கள் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் நிறுவனத்திடமிருந்து ஊதியம் வாங்கி தருவதாக கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை எரித்து; ரயிலை கவிழ்க்க முயற்சி
ராமேஸ்வரம் அருகே ரயில் செம்மமடம் பகுதி தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை எரித்த மர்மநபர் எரித்துள்ளனர். 100 மீட்டர் முன்பாகவே ரயில் இன்ஜின் ஓட்டுனர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரயிலைக் கவிழ்க்க மர்ம நர்களின் சதியா என பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை.
63 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், ராமநாதபுரம், கீழக்கரை, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, திருவாடணை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 158 அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளியிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், மாணவிகள் 63 தேர்வு மையங்களில் 14,956 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை இன்று எழுதினர். தேர்வு மிகவும் எளிதாக இருந்தது என்று மாணவர்கள் கூறினர்
வானிலை அறிக்கை
பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்
காற்றின் வேகம்: 19முதல் 32 கிமீ/ம வரை
காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு
மழைக்கான வாய்ப்பு உண்டு.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த மாதத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.
ராமநாதபுரம்
பெட்ரோல்–112.45, டீசல்– 102.19
ராமேஸ்வரம்
பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88
பரமக்குடி
பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41
திருவாடானை
பெட்ரோல்– 112.31, டீசல்–102.41
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.