ஹோம் /Local News /

பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வீட்டில் நுழைந்த லாரி..ராமநாதபுரம் மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வீட்டில் நுழைந்த லாரி..ராமநாதபுரம் மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

Ramanathapuram District: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்  ஒருசில வரிகளில் காண்போம்..

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம்..

  மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 2019 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத்தரக் கோரியும், விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பாத மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டனர்.

  பாம்பன் குந்துகால் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

  இந்து அறநிலைத்துறை சார்பில் பாம்பன் குந்துகால் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் மறு சீரமைப்பு பணிகள் முழுமையாக நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 4 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் விக்கிரகத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன்பின் சிறப்பு தீபாரதணை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

  பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

  கமுதி கோட்டைமேடு பகுதி சேதுபதி நகரைச் சேர்ந்த மூதாட்டி (65). கமுதியிலிருந்து ராமநாதபுரம் வந்துள்ளார். பேருந்தில் இருந்து சிறிது தூரம் நடந்து செல்லும் போது, மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயின் காணாமல் போகியுள்ளது. இதனையடுத்து மூதாட்டியின் புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  பாம்பன் துறைமுகத்தில் 2ம்–எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

  தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் மையம் கொண்டு 'அசானி' சூறாவளி புயலாக தீவிரமடைந்தது. ஆதலாலா பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளளது.

  புனித சிந்தாத்திரை அன்னை ஆலய திருவிழா

  தொண்டி அருகே புனித சிந்தாத்திரை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10-நாட்களாக நடைபெற்று வந்தது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சிந்தாத்திரை மாதா பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார். இதனை தொடர்ந்து கொடியிறக்கமும் இதனையொட்டி புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து வீட்டிற்குச் சென்ற லாரி

  ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி கண்ணன் என்ற லாரி ஓட்டுனர் ஓட்டிச் சென்ற லாரி மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆனது சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டின் பக்கவாட்டு சுவற்றில் மோதி சுவர் இடிந்து விழுந்து லாரி நின்றது. நல்வாய்ப்பாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் விபத்து ஏதும் ஏற்படவில்லை.

  வானிலை அறிக்கை

  பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்

  காற்றின் வேகம்: 20முதல் 35 கிமீ/ம வரை

  காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு மழைக்கான வாய்ப்பு உண்டு.

  இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

  கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த மாதத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.

  ராமநாதபுரம்

  பெட்ரோல்–112.45, டீசல்– 102.19

  ராமேஸ்வரம்

  பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88

  பரமக்குடி

  பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41

  திருவாடானை

  பெட்ரோல்– 112.31, டீசல்–102.41

  செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

  Published by:Arun
  First published:

  Tags: Ramanathapuram