Home /local-news /

கால்வாய்க்குள் பாய்ந்த கார்.. அகதிகள் வருகை... மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை.. இன்றைய ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

கால்வாய்க்குள் பாய்ந்த கார்.. அகதிகள் வருகை... மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை.. இன்றைய ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்  ஒருசில வரிகளில் காண்போம்..

    இலங்கையில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் முதல் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட முதலுதவி மையம் வரை... ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம்,.

    ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்தன இலங்கை தமிழர்கள்

    இலங்கையில் இருந்து படகு வழியாக ராமேஸ்வரத்திற்கு வந்து சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர்.

    இந்நிலையில், ஏற்கனவே 21 குடும்பத்தை சேர்ந்த 75 பேர் வந்துள்ள நிலையில் தற்போது ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த பச்சைவரி(27), லதா (27) 2 மாத குழந்தை தக்டரா, டன்சிகா (6) ராஜலக்ஷ்மி (56) என5 நபர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

    இரும்பு கடையில் வயர் திருடியவர் கைது

    ராமநாதபுரம் அருகே குயவன்குடியை சேர்ந்த ஞானபிரகாஷ்மூர்த்தி ( 31). ராமநாதபுரத்தில் உள்ள ஆத்மநாதசுவாமி நகர் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருகிறார்.

    இதையடுத்து, இவரது கடையில் நள்ளிரவில் புகுந்து எட்டு கிலோ காப்பர்வயர் கம்பி மற்றும் பித்தளை வயர் கம்பியை திருடி விட்டுச் சென்றுள்ளனர். கேணிக்கரை காவல்நிலையத்தில் இவர் புகார் அளித்துள்ளார். விசாரணையில் ராமநாதபுரம் சேதுநகரை சேர்ந்த பாலமுருகன் (27) என்பது தெரிந்தது. பின் அவர் கைது செய்யப்பட்டார்.

    கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

    சாயல்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மூக்கையூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூக்கையூர் பேருந்து நிறுத்தம் அருகே பாலாஜி (25) என்பவர் சந்தேகத்திற்கு இடமாக நின்றுள்ளார் அவரை காவல்துறையினர் விசாரித்ததில் அவரிடமிருந்து 1½ கிலோ கஞ்சா இருந்ததுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    முதலுதவி சிகிச்சை மையம் திறக்கப்பட்டது

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் அருகே நீண்ட நாட்களாக பூட்டிய நிலையில் இருந்த முதலுதவி மையம் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கிழக்கு ரதவீதியில் கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் ஐந்து படுக்கைக்களுடன் கூடிய முதலுதவி சிகிச்சை மையம் தாயர் செய்யப்பட்டு நீண்ட நாட்களாக பூட்டிய நிலையில் இருந்தது.

    இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்களால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டது. பின்பு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர் ஆகிய ஐந்து பேருக்கும் நியமன ஆணை கடிதம் வழங்கப்பட்டது.

    கால்வாய்க்குள் பாய்ந்த கார் ஆறு பேர் படுகாயம்

    பரமக்குடி பாம்புவிழுந்தான் அருகே ராமேஸ்வரத்தில் இருந்து குருவாயூர் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிய கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த ஆறு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை

    கமுதியை அடுத்த பொந்தம்புளி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி(45) என்பவர் காரைக்காலில் கட்டிட தொழில் வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் ஊருக்கு வந்தவர் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார் இவரது மனைவி முனீஸ்வரி மது அருந்துவதை நிறுத்த சொல்லி கண்டித்துள்ளார்.

    இதையடுத்து, மனமுடைந்து பாண்டி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

    வானிலை அறிக்கை

    பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்

    காற்றின் வேகம்: 11 முதல் 39 கிமீ/ம வரை

    காற்றின் திசை: தெற்கு
    மழைக்கான வாய்ப்பு இல்லை.

    ன்றைய பெட்ரோல் டீசல் விலைநிலவரம்

    கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த மாதத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.

    ராமநாதபுரம்
    பெட்ரோல்–112.45, டீசல்– 102.19

    ராமேஸ்வரம்
    பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88

    பரமக்குடி
    பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41

    திருவாடானை
    பெட்ரோல்– 112.31, டீசல்–102.41


    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி