Home /local-news /

ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்.. மீனவர் போராட்டம் வாபஸ்.. ராமநாதபுரம் மாவட்ட முக்கிய நிகழ்வுகள்..

ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்.. மீனவர் போராட்டம் வாபஸ்.. ராமநாதபுரம் மாவட்ட முக்கிய நிகழ்வுகள்..

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

Ramanthapuram | நாளை நடைபெற இருந்த பேருந்து மறியல் போராட்டம் வாபஸ் பெற்றதிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர் வரை ராமநாதபுரம் மாவட்ட முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்  ஒருசில வரிகளில் காண்போம்,

மேலும் படிக்கவும் ...
    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம், நாளை நடைபெற இருந்த பேருந்து மறியல் ஆர்ப்பாட்டத்தில் வாபஸ் பெற்றதிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கியது வரை காண்போம்.

    மின்சாரம் தாக்கி மூன்று மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின

    மண்டபம் அடுத்த குஞ்சாரவலசை கிராமத்தில் ஓடையில் கனமழையால் மின்கம்பத்தில் இருந்து மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது, அப்போது மேய்ச்சலுக்கு சென்ற கோட்டையப்பன் மற்றும் பொன்னுச்சாமி ஆகியோரின் மாடுகள் கம்பியை மிதித்ததால் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது. இறந்த மூன்று மாட்டிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாட்டின் உரிமையாளர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

    நாளை நடக்க இருந்த மீனவர்களின் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது

    சிறையில் உள்ள 32 மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் விடுவிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  மீனவர்களின் கோரிக்கையை ஏற்று பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டமானது வாபஸ் பெறப்பட்டது.

    நிபந்தனைகளுடன் இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை

    கடந்த மாதம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கமானது இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மீனவர்கள் 10 ஆண்டுகளுக்கு எல்லைதாண்டி மீன்பிடிக்க கூடாது என்றும், அவ்வாறு அத்துமீறி மீன்பிடித்தால் அவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க நேரிடும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    முதுகுளத்தூரில் மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம்

    வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரிகண்ணப்பன் என்பவர் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து, அவர் குடும்பத்தினருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

    ஆர்.எஸ்.மங்களத்தில் கஞ்சா விற்ற மூன்று நபர்கள் கைது

    திருவாடானை அருகே ஆர்.எஸ்.மங்களத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்ற மூன்று பேரை கைது செய்தனர், மேலும், இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காவல்நிலையத்தில் வழக்கு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது

    தொண்டி பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதனால் தண்ணீர் தேக்கமடைந்து கொசு போன்ற விஷக்கிருமிகள் உருவாகின்றன.

    வானிலை அறிக்கை

    பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்

    காற்றின் வேகம்: 30முதல் 46 கிமீ/ம வரை

    காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது.

    இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

    கடந்த ஒரு வாரமாத்திற் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் உள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த வாரத்தின் விலையே இன்றும் நீடிக்கிறது.

    ராமநாதபுரம்

    பெட்ரோல்–112.45, டீசல்– 102.19

    ராமேஸ்வரம்

    பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88

    பரமக்குடி

    பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41

    திருவாடானை

    பெட்ரோல்– 112.31, டீசல்–102.41

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Minister Rajakannappan, Ramanathapuram

    அடுத்த செய்தி