Home /local-news /

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

Ramanathapuram : ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்  ஒருசில வரிகளில் காண்போம், ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை முதல் ரேஷன் அரிசி பதுக்கியது வரை...

  ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம்... 

  ராமலான் திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது

  ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகர் அருகே வசந்தம் மஹால் திடலில் இன்று ரமலான் திருநாளை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

  கடந்த ஒரு மாதமாக உலகமெங்கும் இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் திருநாளை கொண்டாட நோன்பிருந்து வந்தார்கள்.
  இந்நிலையில், நேற்று வானில் தெரிந்த பிறையை யொட்டி இன்று காலை ரமலான் திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
  இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகர் அருகே வசந்தம் மஹால் திடலில் ஏராளமான இஸ்லாமியர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அல்லாஹ்வை நினைத்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

  திருவாடானையில் தொழிற்கடன் வழிகாட்டும் பயிற்சி

  திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தனிநபர் தொழில் முனைவோர்களுக்கான நுண்நிதி தொழில் கடன் வழிகாட்டும் பயிற்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
  இப்பயிற்சிக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்ட வட்டார அணித்தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். இதில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

  திருவாடானை சேயுமானார் கோவில் கும்பாபிஷேக விழா

  திருவாடானை தாலுகா ஓரியூர் கிராமத்தில் பெங்களூரு காரைக்கால் அம்மையார் அறக்கட்டளை, கோவை அறப்பணி அறக்கட்டளை மற்றும் ஓரியூர் கிராம மக்கள் சார்பில் மட்டுவார் குழலியம்மை உடனுறை சேயுமானார் கோவில் புதிதாக கட்டப்பட்டு திருப்பணி நடைபெற்றது. இந்நிலையில், ஓரியூர் அய்யனார் கோவிலில் இருந்து ஓரியூர் கிராமமக்கள் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு எடுத்தும், முளைப்பாரி எடுத்தும் மேளதாளங்கள் முழங்கஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

  சட்டவிரோதமாக 35 மதுபாட்டில்கள் பறிமுதல்

  தொண்டியில் சட்ட‌ விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தி அப்போது அரசு மதுபான கடை அருகில் அனுமதியின்றி மதுபானம் விற்ற கொடிப்பங்கு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (34) என்பவரை கைது செய்தனர்.

  பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல்

  ஆர்.எஸ்.மங்கலம் அருகே ரேஷன் அரிசியை காட்டுக்குள் பதுக்கி வைத்து கடத்த திட்டமிட்டுள்ளதாக ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், அழுந்திக்கோட்டை கண்மாய் நடுவில் காட்டு கருவேல மரங்களுக்கு இடையில் மூடை மூடையாக ரேஷன் அரிசி மற்றும் கோதுமைகளை வைத்து தார்ப்பாய் கொண்டு மூடி வைத்திருந்ததை காவல்துறையினர் கைப்பற்றி கடத்தியவர்களை விசாரித்து தேடி வருகின்றனர்.

  சாலையில் கிடந்த உரப்பாட்டில்கள் மீட்பு

  கீழக்கரை அருகே முள்ளுவாடி விலக்கு சாலை பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டபோது புதரில் விவசாய உரப்பாட்டில்கள் வேளாண்மை சிப்ட்பாக்ஸ் 500-ம் எப்எம் 112-ம் கிடந்துள்ளன. இதையடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வானிலை அறிக்கை

  பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்

  காற்றின் வேகம்: 11 முதல் 39 கிமீ/ம வரை

  காற்றின் திசை: தெற்கு
  மழைக்கான வாய்ப்பு இல்லை.

  இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

  கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த மாதத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.

  ராமநாதபுரம்
  பெட்ரோல்–112.45, டீசல்– 102.19

  ராமேஸ்வரம்
  பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88

  பரமக்குடி
  பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41

  திருவாடானை
  பெட்ரோல்– 112.31, டீசல்–102.41

  செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
  Published by:Arun
  First published:

  Tags: Ramanathapuram

  அடுத்த செய்தி