ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம், 28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது முதல் மூன்று நபருக்கு கொரோனா தொற்று உறுதி வரை
28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொண்டியில் உள்ள விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொண்டி அருகே உள்ள ஓடாவி தெருவில் 28கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்த அசாருதீன் என்பவரை கைது செய்து விசாரணையில்
பெங்களூரில் குறைந்த விலையில் வாங்கி வந்து விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.
மூன்று நபருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா தொற்று மீண்டும் பரவதொடங்கி உள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் மூன்று நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளியில் திருடிய மூன்று நபர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தனியார் பள்ளியில் நாற்காலி, கணினி, முதலியவற்றை திருடி உள்ளனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்து முதுகுளத்தூர் மீனாட்சிபுரதத்தை சேர்ந்த அபினேஷ் உட்பட நான்கு நான்கு பேரை கைது செய்து. மேலும், ஒருவரை தேடிவருகின்றனர்.
கல்லூரி மாணவியருக்கு கல்வெட்டு படிக்கும் பயிற்சி
ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில் உலகின் பழமையான தமிழி கல்வெட்டு எழுத்துக்களைப் ஆன்லைன் மூலம் படிக்கும் பயிற்சி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
வானிலை அறிக்கை
பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்
காற்றின் வேகம்: 17 முதல் 33கிமீ/ம வரை
காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு மழைக்கான வாய்ப்பு இல்லை.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
கடந்த ஒரு வாரமாத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த வாரத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.
ராமநாதபுரம்
பெட்ரோல்–112.45, டீசல்– 102.19
ராமேஸ்வரம்
பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88
பரமக்குடி
பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41
திருவாடானை
பெட்ரோல்– 112.31, டீசல்–102.41
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.