Home /local-news /

மீனவர்களுக்கு கடல்பாசி விதைகள்.. மாற்றுத்திறனாளி பெண் மீது தாக்குதல்.. ராமநாதபுரம் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்.!

மீனவர்களுக்கு கடல்பாசி விதைகள்.. மாற்றுத்திறனாளி பெண் மீது தாக்குதல்.. ராமநாதபுரம் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்.!

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம்,

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம், ராமநாதபுரம் அஞ்சல் துறையினர் சார்பில் நடைபெற் சிறப்பு யோகா பயிற்சி முதல் மூதாட்டியிடம் நான்கு பவுன் ஜெயின் பறிப்பு வரை...

    யோகா தினத்தை முன்னிட்டு அஞ்சல் துறையினர் சார்பாக யோகா பயிற்சி

    உலக யோகா தினம் ஜூன் 21 நடைபெறவுள்ளதையொட்டி அதன்‌தொடர் முன்னோட்டமாக அஞ்சல் துறையினர் சார்பாக பேய்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் சிறப்பு யோகா நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.

    60 வயது மூதாட்டியிடம் நான்கு பவுன் தங்கநகை பறிப்பு

    கமுதி அருகே பெருநாழி கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமி (60) மூதாட்டி வெள்ளாங்குளம் பேருந்து நிலையம் அருகே நின்ற போது இளைஞர் ஒருவர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த நான்கு பவுன் தங்கநகை பறிப்பு தப்பி சென்று விட்டார். மூதாட்டி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    15 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வருகை

    இன்று காலை தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் கோயில் பகுதியில் 5 குடும்பத்தை சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்துள்ளனர். மெரைன் போலீஸ் விசாரணை நடத்தி பின்பு அவர்களை மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    தொண்டி பகுதி மீனவர்களுக்கு கடல்பாசி விதைகள் வழங்கப்பட்டது

    தொண்டியில் உள்ள மீனவர்கள் மற்றும் மகளிர் குழுவினர் கடலில் கடல் பாசி வளர்க்கும் பணியை மேற்கொள்கின்றனர். இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு அவர்களுக்கு கடல்பாசி விதைகள் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய வரை கைது செய்ய சாலைமறியல்

    கமுதியில் நிலப்பிரச்சனை காரணம் ஜெயலெட்சுமி(43) என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை வீடுபுகுந்து தாங்கியவர்களை கைது செய்யகோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வானிலை அறிக்கை

    பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்

    காற்றின் வேகம்: 11 முதல் 22 கிமீ/ம வரை

    காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது.

    இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

    கடந்த ஒரு வாரமாத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த வாரத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.

    ராமநாதபுரம்

    பெட்ரோல்–112.45, டீசல்– 102.19

    ராமேஸ்வரம்

    பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88

    பரமக்குடி
    பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41

    திருவாடானை
    பெட்ரோல்– 112.31, டீசல்–102.41

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி