ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம்...
திருவாடானையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவாடானையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நான்கு வீதி சந்திப்பு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மணல் கடத்திதலில் ஈடுபட்ட இருவர் கைது
ராமநாதபுரம் தொருவளூர் காளியம்மன் கோவில் பகுதியில் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த இருவரை பஜார் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். காவல்நிலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு ஊரணங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜிவ் என்பவர் 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதையடுத்து, அவர் மீது மாவட்ட சமூக நல அலுவலர் திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ராஜிவ் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
பரமக்குடியை அடுத்த எமனேஸ்வரம் பகுதியில் கோவில் திருவிழாவுக்கு முரளிதரன் (31) என்பவர் மின்விளக்கு அமைக்கும் போது மின்கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மூன்று வீட்டிற்குள் புகுந்து செல்போன் பணம் திருடியவர்கள் கைது
தனுஷ்கோடி பகுதியில் வீட்டிற்குள் ஆட்கள் இல்லாத வேளையில் புகுந்து செல்போன் பணம் திருடிய மூன்று நபர் சத்யராஜ், உமயதாஸ் மற்றும் வினோத்குமார் என்பவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை
பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்
காற்றின் வேகம்: 13முதல் 24 கிமீ/ம வரை
காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
கடந்த ஒரு வாரமாத்திற் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த வாரத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.
ராமநாதபுரம்
பெட்ரோல்–112.45, டீசல்– 102.19
ராமேஸ்வரம்
பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88
பரமக்குடி
பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41
திருவாடானை
பெட்ரோல்– 112.31, டீசல்–102.41
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.