சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி முதல் ஆக்கிரமிப்பு இடங்கள் அகற்றம் வரை...
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம்...
ஆக்கிரமிப்புகளை அகற்றிய வனத்துறையினர் :
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள வனத்துறையினருக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை அகற்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, 25 பேர் வசமிருந்த 40 ஏக்கர் ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள கட்டிடங்களை வனத்துறையினர் அகற்றினர்.
கமுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது
கமுதி அருகே நெடுங்குளம் சேர்ந்த தர்மர் என்பவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். சிறுமியின் தாயார் கமுதி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார், இதனையடுத்து தர்மர் கைது செய்யப்பட்டார்.
சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி
75-வது இந்திய சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் ராமேஸ்வரம் அடுத்த பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் சுதந்திர போராட்ட வரலாற்று புகைப்பட கண்காட்சி பொதுமக்களுக்கு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரது புகைப்படமும் வரலாற்று காண்பிக்கப்பட்டது.
கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் பறிமுதல்
திருவாடானை தாலுகா கொட்டகுடி ஆ.மணக்குடி பகுதி சாலையில் கடத்துவதற்காக 55 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மணல் மூடைகளை கைப்பற்றிய வருவாய் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் அருகில் இருந்த மீன்கடை அகற்றம்
பெரியபட்டிணம் பகுதியில் உள்ள அழகு நாயகி அம்மன் கோயில் அருகே சில தினங்களுக்கு முன் மீன் கடை அமைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கோவில் பகுதியில் மீன்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மீன்கடை அகற்றப்பட்டது.
வானிலை அறிக்கை
பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்
காற்றின் வேகம்: 13முதல் 22 கிமீ/ம வரை
காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு மழைக்கான வாய்ப்பு இல்லை.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
கடந்த ஒரு வாரமாத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த வாரத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.
ராமநாதபுரம்
பெட்ரோல்–112.45, டீசல்– 102.19
ராமேஸ்வரம்
பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88
பரமக்குடி
பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41
திருவாடானை
பெட்ரோல்– 112.31, டீசல்–102.41
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.