ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம், தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த 4 குடும்பத்தினர் முதல் ரேசன் அரிசி திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டது வரை..
600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய மூன்று நபர் கைது
அபிராமம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதையடுத்து வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டு விக்னேஷ் (22), சின்னத்துரை (30), விஜயபாண்டி (25) மூன்று பேரும் ராமநாதபுரம் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
4 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்
இலங்கை ஏற்படும் பொருளாதார நெருக்கடியால் தனுஷ்கோடியில் 4 குடும்பத்தை சேர்ந்த இலங்கை தமிழர்கள் கடல் வழியாக வந்துள்ளனர். மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி பின்பு அவர்களை மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சேர்த்தனர்
அரசு உப்பு நிறுவனத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
வாலிநோக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் அந்த பகுதியில் கிராமமக்களை மீன்பிடிக்கதடை விதிப்பதாகவும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி திட்ட மேலாளரை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு காவல்துறையினரால் சமரசம்
பாம்பன் பாலத்தை கடந்து சென்ற சரக்கு கப்பல்
பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறக்கப்பட்டு சரக்கு கப்பல் மற்றும் இழுவை கப்பல் பாம்பன் பாலத்தை கொல்கத்தாவிற்கும், கர்நாடகவிற்கும் தூக்கு பாலத்தை கடந்து சென்றது. இதனை பாம்பன் சாலை பாலத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
திருவாடானையில் மாட்டை அரிவாளால் வெட்டிய மர்மநபர்
வயலில் மேயும் பசு மாடுகளை மர்ம நபர் ஒருவர் கத்தியால் வெட்டுவதாக காயப்பட்ட மாட்டுடன் திருவாடானை அருகே தீர்த்தாகுன்றம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் திருவாடானை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
வானிலை அறிக்கை
பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்
காற்றின் வேகம்: 17முதல் 33 கிமீ/ம வரை
காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
கடந்த ஒரு வாரமாத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த வாரத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.
ராமநாதபுரம்
பெட்ரோல்–112.45, டீசல்– 102.19
ராமேஸ்வரம்
பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88
பரமக்குடி
பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41
திருவாடானை
பெட்ரோல்– 112.31, டீசல்–102.41
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.