Home /local-news /

பரமக்குடியில் மத்திய அமைச்சர்.. ராமநாதபுரத்தில் கடைகளில் தொடர் திருட்டு.. இன்றைய மாவட்ட செய்திகள்...

பரமக்குடியில் மத்திய அமைச்சர்.. ராமநாதபுரத்தில் கடைகளில் தொடர் திருட்டு.. இன்றைய மாவட்ட செய்திகள்...

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்  ஒருசில வரிகளில் காண்போம், இலங்கையை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வந்து சாதனை படைத்த சிறுவன் முதல் பரமக்குடியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மத்திய இணை

மேலும் படிக்கவும் ...
    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம், இலங்கையை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வந்து சாதனை படைத்த சிறுவன் முதல் பரமக்குடியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர் வரை.

    தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை

    மும்பை சேர்ந்த 16 வயதுடைய நீச்சல் வீரர் அன்சுமான் ஜிங்ரான் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை 9 மணிநேரம் 45 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.


    முதுகுளத்தூரில் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது

    முதுகுளத்தூரில் போதைப் பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், கன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (38) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் ஒரு லட்சம் மதிப்புடைய போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

    நள்ளிரவில் கடைகளுக்குள் புகுந்து ரூ.25 ஆயிரம் திருட்டு

    ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மூன்று கடைகளில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் ரூ.25 பணத்தை திருடி உள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமரா கொண்டு விசாரித்து வருகின்றனர்.

    தொண்டி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

    திருவாடானை அடுத்த தளூர்மருங்கூர் கிராமத்தில் ஊரணி புறம்போக்கு நிலமான சுமார் 20 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து தாசில்தார் செந்தில் வேல் முருகன் தலைமையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைத்தும் அகற்றப்பட்டன.

    மரங்கள் சரணாலயத்தை பார்வையிட்ட மத்திய இணைஅமைச்சர்

    சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி பரமக்குடியில் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.64.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் நாற்றாங்கால் அமைக்கும் பணியை பார்வையிட்டார். பின், மரங்கள் சரணாலயத்தை பலவிதமான மரக்கன்றுகள் அமைக்கப்பட்டுருப்பதையும் பார்வையிட்டார்.

    வானிலை அறிக்கை

    பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்
    காற்றின் வேகம்: 13முதல் 28 கிமீ/ம வரை
    காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு மழைக்கான வாய்ப்பு இல்லை.

    இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

    கடந்த ஒரு வாரமாத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த வாரத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.

    ராமநாதபுரம்
    பெட்ரோல்–112.45, டீசல்– 102.19

    ராமேஸ்வரம்
    பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88

    பரமக்குடி
    பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41

    திருவாடானை
    பெட்ரோல்– 112.31, டீசல்–102.41

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி