Home /local-news /

ராமநாதபுரம் மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்.!

ராமநாதபுரம் மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்.!

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்  ஒருசில வரிகளில் காண்போம், எட்டு மாத குழந்தையுடன் தாய் தற்கொலை முதல் வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு வரை காண்போம்...

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம், எட்டு மாத குழந்தையுடன் தாய் தற்கொலை முதல் வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு வரை காண்போம்...

    குழந்தைக்கு வலிப்பு நோய் மனமுடைந்த தாய் குழந்தையுடன் தற்கொலை

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் - திவ்யா தம்பதியினருக்கு எட்டு மாத குழந்தை உள்ளது. முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு தர்ஷினி என்ற 8 மாத குழந்தை உள்ளது. குழந்தை பிறந்ததிலிருந்து வலிப்பு நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இதனால் திவ்யா மனமுடைந்து இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு குழந்தைக்கு பூச்சி மருந்தை கொடுத்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    பழீ வாங்க வாளுடன் சுற்றி திரிந்த இளைஞர் கைது

    கமுதி அடுத்த பூ மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (33) என்பவர் வேப்பங்குளம் விலக்கு சாலையில் நடந்து சென்றபோது அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளார். விரட்டி பிடித்து விசாரித்ததில் வேப்பங்குளம் துரைப்பாண்டி என்பவரின் கொலை வழக்கு தொடர்பாக பழிக்கு பழிவாங்குவதற்காக வாளுடன் சென்றுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் வாளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    சவர்மா விற்பனை கடையில் எட்டு கிலோ கோழி இறைச்சி பறிமுதல்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 19 கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் கருகிய நிலையில் இருந்த 8 கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர உரிய விவரம் பதிவு இல்லாத சவர்மா சுற்றப்படும் பேப்பர்கள் வைத்திருந்ததாக 12 கிலோ காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம்

    திருவாடானை அருகே முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த சமயதேவி (வயது 21) காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த கேட்வின் அக்விடேஸ் (22) என்பவரும் காதலித்து கடந்த 4-ந் தேதி வெளியூர் சென்று திருமணம் செய்துள்ளனர்.
    இதையடுத்து, இவர்கள் 2 பேரும் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்துள்ளனர், காவல்துறையினர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற–மாநில அளவிலான இரட்டையர் பேட்மிட்டன் போட்டி

    ராமநாதபுரம் அடுத்த ராமேஸ்வரத்தில் சத்தியா நகர் பகுதியில் அமைந்துள்ள ஜெரோம் பேட்மிட்டன் அகாடமியில் 25- ஜம்புள் மற்றும் 35- ஜம்புள் மாநில அளவிலான போட்டியில் வெளியூரை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
    இதையடுத்து, நடைபெற்ற இரட்டையர் இறகு பந்து போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் காரைக்குடியை சேர்ந்த சதீஸ் மற்றும் முருகன் முதலிடமும், திருநெல்வேலி ஜெரோன் மற்றும் தேனி சேர்ந்த குரு 2-ஆம் இடமும் பரமக்குடி கல்யாணகுமார் மற்றும் காரைக்குடி அருண் மூன்றாம் இடமும் ஜெரோம் அகாடமியை சேர்ந்த பஞ்சாட்சரம் ரெங்கேஸ்வரன் ஆகியோர் 4-ஆம் இடமும் பெற்றனர்.

    வானிலை அறிக்கை

    பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்

    காற்றின் வேகம்: 20முதல் 35 கிமீ/ம வரை

    காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு
    மழைக்கான வாய்ப்பு உண்டு.

    இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

    கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த மாதத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.

    ராமநாதபுரம்
    பெட்ரோல்–112.45, டீசல்– 102.19

    ராமேஸ்வரம்
    பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88

    பரமக்குடி
    பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41

    திருவாடானை
    பெட்ரோல்– 112.31, டீசல்–102.41

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி