Home /local-news /

பீஸ்ட் ரிலீஸ் முதல் சொக்கநாதர் கோவில் பட்டாபிஷேகம் வரை.. ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்...

பீஸ்ட் ரிலீஸ் முதல் சொக்கநாதர் கோவில் பட்டாபிஷேகம் வரை.. ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்...

ராமநாதபுரத்தின் இன்றைய(13.04.2022) முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரத்தின் இன்றைய(13.04.2022) முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

Ramanathapuram District Headlines | ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம்,

    விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியீடு முதல் குழந்தை திருமணம் தடைச்சட்டம் விழிப்புணர்வு வரை... ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம்.... 

    விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் ஆரவாரம்

    விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இதில் தமிழகம் முழுவதும் வெளியானது இதையொட்டி ராமநாதபுரத்தில் உள்ள மூன்று திரையரங்குகளிலும் பிஸ்ட் படம் வெளியிடப்பட்டது இதனை கொண்டாட காலை 3 மணியிலிருந்து ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்தனர் பேனருக்கு பாலபிஷேகம் செய்தும் ராமேஸ்வரத்தில் இருந்து காரில் வரிசையாக ராமநாதபுரத்திற்கு சென்று படத்தை ரசிகர்கள் கண்டு களித்தனர்.

    மீனாட்சி சொர்க்கவாசல் கோவில் பட்டாபிஷேக அலங்காரம்

    ராமநாதபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் மீனாட்சி அம்மன் கையில் செங்கோலுடன் பட்டாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்

    பாம்பனில் குழந்தை திருமண தடை சட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம்

    இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஊராட்சி மன்றத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள் திருமண தடை சட்டம் மற்றும் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியானது ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது இதில் அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    வாலிபரை கட்டையால் அடித்து கொலை; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

    ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியில் வாலிபரை சந்தியா ரெனி என்பவரை கட்டையால் அடித்து கொலை செய்தகு பிச்சை (44) என்பவருக்கு ஆயுள் தண்டனை, ராமநாதபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

    சவுண்டம்மன்,வண்டபுலி காளியம்மன் கோயில் பொங்கல் விழா

    கமுதி அருகே பேரையூர் வட்டம்தொட்டிபட்டி சவுண்டம்மன் கோயில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதேபோல் வண்டபுலி காளியம்மன் கோயில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கரகம் எடுத்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்து அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.

    மின்சார கம்பி அருந்து விழுந்து ஆடு மேய்த்து கொண்டிருந்த தொழிலாளி பலி

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முதுகுளத்தூர் அருகே வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணன் (32) என்பவர் வயல்வெளியில் செம்மறி ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தொழிலாளி மீது கம்பி அருந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆடு மேய்த்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாயில் கருப்பு துணிகட்டி எதிர்கட்சியினர் ஒன்றிய குழு கூட்டத்தில் பங்கேற்பு

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சியை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணிியை கட்டிக்கொண்டு கலந்து கொண்டனர்

    வானிலை அறிக்கை

    பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம் காற்றின் வேகம்: 17 முதல் 37 கிமீ/ம வரை காற்றின் திசை: தெற்கு மற்றும் தென்மேற்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது

    நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது

    தமிழக கடலோரப் பகுதியில் மீன்பிடி இனப்பெருக்கத்திற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மத்திய அரசு அறிவிப்பின்படி தமிழக அரசு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மீன் பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடைக்காலம் விதிக்கப்படும். இந்நிலையில் நாளை இரவில் இருந்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள்

    முதியவருக்கு உதவுவது போல நடித்து ஏடிஎம்மில் பணம் திருட்டு

    கமுதியில் வங்கி ஏடிஎம் மையத்தில் ராமச்சந்திரன் (62) முதியவருக்கு பணம் எடுத்துக் கொடுப்பது போல் எடுத்துக் கொடுத்துவிட்டு பின்பு அவர் கையில் வேறொரு ஏடிஎம் காரடை கொடுத்து, சென்ற பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்து 50,000 ரூபாய் பணத்தை கொள்ளை அடிக்கப்பட்டது. சிசிடிவி கொண்டு குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    அடுத்த செய்தி