கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தினசரி ரயில்களை மீண்டும் இயக்குவதற்கு கோரிக்கை முதல் இலங்கைக்கு கடத்த முயன்ற போதைப்பொருள் பறிமுதல் வரை. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் காண்போம்..
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தினசரி ரயில்கள் மீண்டும் இயக்க ஏஐடியுசி சங்கம் கோரிக்கை.
ராமேஸ்வரத்தில் கொரோனாவிற்கு முன்பு இயக்கப்பட்ட அனைத்து தினசரி ரயில்களையும் மீண்டும் இயக்க கோரி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ராமேஸ்வரம் நிலைய அதிகாரியிடம் மனு அளித்தனர்.
சேமிப்பு கிடங்கு இல்லாததால் வீணாகும் நெல் மூட்டைகள்: கண்கலங்கும் விவசாயிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு வசதி இல்லாமல் சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் நெல்மூடைகள் கோடைமழையில் நனைந்து நெல்மணி வீணாகிறது.
கொள்முதல் செய்த நெல்மூடைகளையும், கொள்முதல் செய்ய கொண்டுவந்துள்ள நெல்மூடைகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மூடைமூடையாக அடுக்கி வைத்துள்ளனர்.
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.1 கோடி மதிப்புடைய போதைப்பொருள்
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த கிறிஸ்டல் பெத்தலின் என்ற போதை பொருள் பறிமுதல் ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்து இருவர் கைது, செய்தனர், மேலும் இதில் சம்பந்தப்பட்ட இருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
விசாரணையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த ஒன்றை கிலோ எடை கொண்ட கிரிஸ்டல் பெத்தலின் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருள் என்பது தெரியவந்தது.
முதுகுளத்தூரில் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.ம.மு.கவினர் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மேற்கு மாவட்ட அதிமுகவினர் சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது இதில் அக்கட்சியின் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.