Home /local-news /

கால்வாய்க்குள் விழுந்த கார்.. கரை ஒதுங்கிய மீனவர் உடல்.. ராமாநாதபுரம் மாவட்ட முக்கிய செய்திகள்..

கால்வாய்க்குள் விழுந்த கார்.. கரை ஒதுங்கிய மீனவர் உடல்.. ராமாநாதபுரம் மாவட்ட முக்கிய செய்திகள்..

ராமநாதபுரத்தின் இன்றைய(11.04.2022) முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரத்தின் இன்றைய(11.04.2022) முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை ஒருசில வரிகளில் காண்போம், நகர்மன்ற கூட்டத்தின் தீர்மானங்களில் இருந்து நேற்றைய முன்தினம் இருந்த மீனவரின் உடல் கரை ஒதுங்கியது வரை..

மேலும் படிக்கவும் ...
    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை ஒருசில வரிகளில் காண்போம், நகர்மன்ற கூட்டத்தின் தீர்மானங்களில் இருந்து நேற்றைய முன்தினம் இருந்த மீனவரின் உடல் கரை ஒதுங்கியது வரை.. 

    ராமேஸ்வரம் நகராட்சியில் இன்று முதல் தீர்மானம் கூட்டம் நடைபெற்றது

    ராமேஸ்வரம் நகராட்சி மன்ற முதல் கூட்டமானது இன்று காலை நகர் மன்றத் தலைவர் அவர்களின் தலைமையில் நகராட்சியில் நகர்மன்ற கூட்ட அலுவலகத்தில் நடைபெற்றது இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ராமேஸ்வரம் நகராட்சியானது ராமநாதபுரத்தின் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளடக்கியதாகும். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 44856 மக்கள் தொகை உள்ளது.இந்த முதல் தீர்மானம் கூட்டத்தில் மொத்த 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மது போதையில் காரை ஓட்டிய இளைஞர், தலைகுப்புற கால்வாய்க்குள் விழுந்த கார்

    பரமக்குடியில் மதுபோதையில் இளைஞர் காரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கார் தூக்கி வீசப்பட்டு கால்வாய்க்குள் விழுந்தது, சம்பவ இடத்தில் ஒருவர் பழியாகினார்.

    இந்நிலையில், விபத்தில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்ற மூவரும் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கரை ஒதுங்கியது மீனவர் உடல்; மருத்துவமனையில் கதறி அழுத குடும்பத்தினர்

    கடலில் மீன் பிடிக்கும் பொழுது தவறி நேற்று முன்தினம் விழுந்த மீனவரின் உடல் இன்று காலை தனுஷ்கோடி பாலம் அருகே கரை ஒதுங்கியது.

    சக மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றார். வலையை கடலில் போட்ட போது படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். சக மீனவர்கள் அவரை தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை முனியராஜ் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் நான்கு படகில் கடலில் தேடிச்சென்றனர்.

    இந்திய கடற்படையினரும், மரைன் போலீசாரும் படகில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் தேடி வந்த நிலையில் இன்று காலையில் தனுஷ்கோடி பாலம் பகுதியில் சடலமாக உடல் கரை ஒதுங்கியது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி