ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வட்டாட்சியர் செந்தில் வேல் முருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு மணல் திருட்டை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பணி முடிந்து அதிகாலை பாரதி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு திரும்பியபோது, அங்கு நின்றிருந்த மினி லாரி ஒன்று அவரைக் கண்டதும் பின்னோக்கி சென்று தப்ப முயன்றது.
இதனை கண்ட வட்டாட்சியர் மற்றும் கிராம உதவியாளர்கள் மினி லாரியை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில் லாரியில் 28 மூடைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, லாரி ஓட்டி வந்த காரைக்குடியைச் சேர்ந்த சிறுவன் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கருண்குமார், பப்லு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த செந்தில் என்பவருக்கு ரேசன் அரிசி கொண்டு செல்வதற்காக வீடு வீடாக சேகரித்து மொத்தமாக வாங்கி சேர்த்து கடத்திக் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து மினி லாரியும், 1,260 கிலோ கொண்ட 1.26 டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்த வட்டாட்சியர் செந்தில் முருகன் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.