Home /local-news /

கடல் பசுவை வெட்டி விற்பனை மீனவர் கைது.!

கடல் பசுவை வெட்டி விற்பனை மீனவர் கைது.!

கடல் பசுவை வெட்டி விற்க முயன்றவர்கள் கைது

கடல் பசுவை வெட்டி விற்க முயன்றவர்கள் கைது

சோதனையில் அந்த குடோனில் , 300 கிலோ கொண்ட கடல்பசு கறி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள் கிடந்துள்ளன.

    தொண்டி கடற்கரை பகுதிகளில் மீன் பிடிக்கும் பொழுது மீன் வலையில் சிக்கிய 300 கிலோ எடை கொண்ட கடல் பசுவை விற்பனை செய்ய முயன்றவர்களை கைது செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடல்பசுவை பிடித்து குடோனில் வைத்து வெட்டி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து, ராமநாதபுரம் வனச்சரகர் ஜெபஸ் உத்தரவின் பேரில் தொண்டி கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், வனக்காப்பாளர் ஜோசப், வேட்டை தடுப்பு காவலர் பாஸ்கர் ஆகியோர் அங்கு விரைந்து சென்ற அந்த குடோனில் சோதனையிட்டனர்.

    சோதனையில் அந்த குடோனில் , 300 கிலோ கொண்ட கடல்பசு கறி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள் கிடந்துள்ளன. இது தொடர்பாக வனச்சரகர் ஜெபேஸ் தீவிர விசாரணை ஈடுபட்டார். விசாரணையில் நமது ஆடையை சேர்ந்த மீனவர் ராக்கப்பன்(30) அவரது தம்பி பழனி (25) கடல் பசுவை வெட்டியதுதெரியவந்தது,

    இந்நிலையில், ராக்கப்பன் கைது செய்யப்பட்டார், இவரது தம்பி பழனி தப்பிச் சென்றுள்ளார். இவர்கள் வைத்திருந்த படகு மற்றும் மீன்பிடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும், இவர்கள் கடல் பசுவை கிலோ ரூ. 500 வீதம் வாட்ஸ் அப்பில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து ராக்கப்பனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து தப்பியோடிய பழனியை தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட ராக்கப்பனை திருவாடானை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    First published:

    அடுத்த செய்தி