Home /local-news /

திருவாடானை : இடியும் நிலையில் இருந்த நீர்தேக்க தொட்டி அகற்றம் 

திருவாடானை : இடியும் நிலையில் இருந்த நீர்தேக்க தொட்டி அகற்றம் 

திருவாடானை:

திருவாடானை: இடியும் நிலையில் இருந்த நீர்தேக்க தொட்டி அகற்றம் 

ஆபத்தான நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றியதற்கு அப்பகுதி மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    திருவாடானை அருகே இடியும் நிலையில் காவு வாங்க காத்திருந்த ஆபத்தான குடிதண்ணீர் நீர்தேக்க தொட்டி அகற்றப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பழங்குளம் ஊராட்சி தெற்கு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சமுதாய கூடத்தின் அருகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தமேல்நிலை நீர்தேக்க தொட்டி மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில்இருந்தது.

    இந்த சமுதாய கூடத்தில் திருமண நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகள் சிறுவர், சிறுமியர் மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் படித்து வருகின்றனர். எனவே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஆபத்தான இந்தநீர்த்தேக்கத் தொட்டி இடிக்கப்பட்டது. மேலும் புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர அதிகாரிகள் முன்வந்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றியதற்கு அப்பகுதி மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி