தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 1,326 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இந்த வருடத்தின் முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற முறையில் ராமேஸ்வரம் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, மற்றும் ராமநாதபுரம் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் 8 அமர்வுகளில் நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 1326 வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நான்கு அமர்வுகளும் ராமேஸ்வரம் கமுதி முதுகுளத்தூர் திருவாடானை ஆகிய நீதிமன்றங்களில் தலா ஒரு அமர்வுகள் இந்த வழக்குகளை விசாரித்தனர். இந்த மக்கள் நீதிமன்றத்தில் முடியும் வழக்குகளில் இருதரப்பினருக்கும் வெற்றி ஏற்பட்டதாக அமையும். இதில் தீர்வு காணப்படும் வழக்குகளில் மேல்முறையீடு கிடையாது. மேலும், வழக்கில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்படும்.
இந்நிலையில், மாவட்டத்தில் வங்கிகளில் உள்ள வராக்கடன் வழக்குகள் மற்றும் தொழிலாளர்கள் இழப்பீடு, சிறு குற்ற வழக்குகள், குடும்ப நலவழக்குகள், சிவில் வழக்குகள் போன்ற சமரசம் செய்து கொள்ளக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.