Home /local-news /

பிளஸ் 2 தமிழ் பொதுத் தமிழ் தேர்வு மிகவும் ஈஸி- ராமநாதபுரம் மாணவர்கள் உற்சாகம்

பிளஸ் 2 தமிழ் பொதுத் தமிழ் தேர்வு மிகவும் ஈஸி- ராமநாதபுரம் மாணவர்கள் உற்சாகம்

தேர்வு

தேர்வு மிகவும் எளிதாக இருந்தது; மகிழ்ச்சியாக கூறிய மாணவர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 158 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், மாணவிகளுக்கு 63 தேர்வு மையங்களில் தமிழ் பொதுத்தேர்வு, மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 158 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், மாணவிகளுக்கு 63 தேர்வு மையங்களில் தமிழ் பொதுத்தேர்வு, மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், ராமநாதபுரம், கீழக்கரை, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, திருவாடணை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 158 அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளியிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், மாணவிகள் 63 தேர்வு மையங்களில் 14,956 மாணவ, மாணவிகள் தமிழ் பொதுத்தேர்வை இன்று எழுதினர்.

    இதில் மாணவர்கள் 7118 பேர்களும், மாணவிகள் 7838 பேர்களும் தேர்வு எழுதுவதோடு மாற்றுத்திறனாளி மாணவர்கள் 30 பேர் தேர்வு எழுதினர். பின்னர் தேர்வு எழுத வரும் மாணவர்கள் மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் அந்தந்த தேர்வு மையங்களில் 83 நிற்கும் படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொரு வகுப்பறைகளாக சென்று தேர்வில் எதுவும் குளறுபடிகள் ஏற்படுத்துகிறதா என்பன குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேர்வு குறித்து மாணவன் பரத்வாஜ் கூறியதாவது:-

    தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது, எதிர்பார்த்த வினாக்கள் வந்துள்ளன, வினாத்தாள் எளிதாக இருந்ததால் பதற்றம் இல்லா எழுதினோம், மேலும் ஒரேயொரு வினா மட்டும் அதாவது 42-ல் கேட்கப்பட்ட பாடாண்திணை சான்றுடன் விளக்குக கேள்வி மட்டும் பாடத்திட்டத்தில் இல்லாததில் இருந்து வந்துள்ளது என்று கூறினார்.


    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Public exams, Ramanathapuram

    அடுத்த செய்தி