Home /local-news /

தனுஷ்கோடி அழகை ரசிக்கும் வகையில் கலங்கரை விளக்கத்தில் சிறப்பு ஏற்பாடு

தனுஷ்கோடி அழகை ரசிக்கும் வகையில் கலங்கரை விளக்கத்தில் சிறப்பு ஏற்பாடு

Dhanushkodi 

Dhanushkodi  | ரூ. 7 கோடி மதிப்பில் 50 மீட்டர் உயரத்தில் மின்தூக்கி வசதிகளுடன் கூடிய கலங்கரை விளக்கமாக இது அமைய உள்ளது.

Dhanushkodi  | ரூ. 7 கோடி மதிப்பில் 50 மீட்டர் உயரத்தில் மின்தூக்கி வசதிகளுடன் கூடிய கலங்கரை விளக்கமாக இது அமைய உள்ளது.

    தனுஷ்கோடியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் மூலம் புதிய கலங்கரை விளக்கம் நவீன ரேடார் கருவி வசதியுடன் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    புயலால் அழிந்து போன தனுஷ்கோடியை மீட்டெடுக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், இந்திய எல்லை பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்கரை பகுதிகளை கண்காணிப்பதற்காகவும், ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 18.02.2020 அன்று நடைபெற்றது.

    ரூ. 7 கோடி மதிப்பில் 50 மீட்டர் உயரத்தில் மின்தூக்கி வசதிகளுடன் கூடிய கலங்கரை விளக்கமாக இது அமைய உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்திலிருந்து ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியின் அழகை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு வசதி செய்யப்படும். கலங்கரை விளக்கத்துடன் குழந்தைகளுக்கான பூங்கா அமைக்கப்படுகிறது.

    கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதியில் அமைக்கப்படும் மின்விளக்கின் வெளிச்சமானது. 30 கி.மீ தூரம் வரையிலும், அதாவது தனுஷ்கோடியிலிருந்து இலங்கை அருகே உள்ள தலைமன்னார் வரையிலும் ஒளிவீசும் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி